பிரசாந்த் நீல் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வெற்றிநடைபோட்ட திரைப்படம் 'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப்-2'.  இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர்களில் கன்னட நடிகர்  பி.எஸ்.அவினாஷ்-ம் ஒருவர்.  இதற்கு முன்னர் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரை அதிக பிரபலமாக்கியது கேஜிஎஃப் படம் தான்.  இந்த நடிகர் கடந்த புதன்கிழமையன்று காலை பெங்களூரில் கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்


இவர் வழக்கமாக காரில் ஜிம்மிற்கு செல்லும்போது, வழியில் வந்த கேன்டர் டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் எவ்வித காயமின்றி தப்பினார்.  தனக்கு நடந்த விபத்து குறித்து இப்போது நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, ரசிகர்கள் தன்மீது காட்டிய அக்கறைக்கு நன்றியும் தெரிவித்தார்.  அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறுகையில், “நேற்று காலை 6:05 மணியளவில், எனக்கு வாழ்நாளில் மிகவும் பயத்தை கொடுத்த நாள், சிறிது  நேரத்திற்குள் கற்பனைக்கு எட்டாத ஒரு பயங்கரமான நிகழ்வு நடந்துவிட்டது.  நான் ஜிம்மை நோக்கிச் சென்றபோது, ​​​​அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே பச்சை விளக்கு எரிந்தது, ஆனால் சிவப்பு சிக்னலைத் தாண்டி காலியான சாலையில் வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது.


 



உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, நான் விபத்தில் காயமடையவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டிருக்கிறது.  எனக்கு உறுதுணையாய் நின்ற எனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் திறமையான காவல்துறையினருக்கும் நன்றி.  இத்தகைய அன்பின் வெளிப்பாட்டைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் இதையெல்லாம் பார்க்கும்பொழுது உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன், நன்றி என்று நடிகர் அவினாஷ் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR