அண்மையில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம், தமிழில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. டப்பிங் படம் என்றாலும், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர். இது வசூலிலும் எதிரொலித்தது. மேலும், டப்பிங் திரைப்படத்தில் தமிழகத்தில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற சாதனையையும் கேஜிஎப் 2 படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’ஆதாரத்தோடு கிசுகிசு பேசுகிறேன்’ கே.ராஜனுக்கு பதிலடி கொடுத்த பயில்வான் ரங்கநாதன்


லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, பீஸ்ட் திரைப்படம் தமிழக வசூலில் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை கேஜிஎப் 2 பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டுமொத்த வசூலையும் கடந்துள்ள கேஜிஎப் 2 திரைப்படம், அடுத்து பீஸ்ட் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் பீஸ்ட் வசூலை எட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 



பீஸ்ட் திரைப்படத்தை ஒப்பிடும்போது கேஜிஎப் 2 குறைவான தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தாலும், அந்த படத்துக்கு ரசிகர்களிடையே இன்னும் வரவேற்பு இருக்கிறது. நகரப் பகுதிகளில் வார இறுதி நாட்களில் கேஜிஎப் 2 படம் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் ஒரு தகவல் உறுதியாகியுள்ளது. நல்ல கன்டென்ட் உள்ள, ரசிகர்களை மகிழ்விக்க கூடிய படமாக, எந்தமொழி திரைப்படமாக இருந்தாலும் அதற்கு வரவேற்பு கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.


மேலும் படிக்க | எஸ்.ஜே.சூர்யாவுக்கு லேட்டஸ்டாக கிடைத்த கியூட் தங்கை


இது கேஜிஎப் 2 திரைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. கேஜிஎப் 2 திரைப்படத்தை அமேசான் பிரைம் சுமார் 322 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் ஓடிடியில் வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வசூல் நிலவரத்தை பார்க்கும்போது, கேஜிஎப் 2, ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வசூலையும் கிட்டதட்ட நெருங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR