எஸ்.ஜே.சூர்யாவுக்கு லேட்டஸ்டாக கிடைத்த கியூட் தங்கை

டான் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிவாங்கியை புகழந்து தள்ளினார்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2022, 04:51 PM IST
  • கோடையில் டான் திரைப்படம் வெற்றி பெறும்
  • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை
  • சிவாங்கியை புகழ்ந்து தள்ளினார்
எஸ்.ஜே.சூர்யாவுக்கு லேட்டஸ்டாக கிடைத்த கியூட் தங்கை title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13 ஆம் தேதி ரிலீஸாகும் திரைப்பம் டான். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் தீவிர புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். அண்மையில் சென்னையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸூம் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகயேன், நாயகி பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது படத்தில் நடித்த அனுபவம் குறித்து அனைவரும் கலகலப்பாக பகிர்ந்து கொண்டனர். 

மேலும் படிக்க | ‘புஷ்பா- 2’வில் என்ன ஸ்பெஷல்?! - ‘லீக்’ ஆன ‘ஃபையர்’ அப்டேட்!

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிவாங்கி, இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விழாவில் பேசிய அவர், நீண்ட நெடிய உரையை வாசித்தார். அதில் வாய்ப்பு கொடுத்தவர்கள் முதல் படத்தளத்தில் வேலை பார்த்தவர்கள் என அனைவருக்கும் மறக்காமல் நன்றி சொன்னார். இடைஇடையே சில பெயர்களை மறந்துவிட்டார். ஞாபகம் வரும்போது திடீரென பேசுக்கொண்டிருப்பவர்களை நிறுத்திவிட்டு அவர்களுக்கு நன்றி கூறினார். சிவாங்கியின் இந்த கியூட்டான பேச்சு அரங்கத்தில் இருந்தவர்களை சிரிக்க வைத்தது. 

மேடைக்கு கீழ் இருந்த சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் சிவாங்கி பேசியதை சிரித்துக் கொண்டே ரசித்தனர். எஸ்.ஜே.சூர்யா திடீரென எழுந்து, சிவாங்கியை பாடுமாறு கேட்டு, சிவாங்கி குரலில் பாட்டைக் கேட்டு ரசித்தார். அவர் மேடை ஏறி பேசியபோதும் சிவாங்கியை புகழத் தவறவில்லை. சிவாங்கி ஒரு பொம்மை, கியூட்டான பொண்ணு எனக் கூறிய அவர், சிவாங்கி பேசுவதற்கும் பாடுவதற்கும் சம்பந்தமே இல்லை எனத் தெரிவித்தார். சிவாங்கி பாடுவார் என்பது தனக்கு முதலில் தெரியாது எனக் கூறிய எஸ்.ஜே.சூர்யா, அவர் பாடும் பாடலை கேட்டபிறகு குரலுக்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும், சிவாங்கி தனக்கு தங்கை என்றும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

எஸ்.ஜே.சூர்யா இவ்வாறு கூறியவுடன் சிவாங்கி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். மேலும், எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார். ’டான்’ திரைப்படத்தில் சூரியும் நடித்திருக்கிறார். அனிரூத் இசையமைத்திருக்கிறார். கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு படம் உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க | விஜய் படத்தைப் பங்கமாகக் கலாய்த்த இயக்குநர்! - அதுவும் இவ்வளவு ஓப்பனாகவா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News