கன்னட திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தும் நடிகர்களுள் ஒருவர், கிச்சா சுதீப். இவர் கன்னட மொழி படங்களில் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஈகா’ (நான் ஈ) படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். இவருக்கு பான் இந்தியா அளவில் மவுசு உள்ளது. சுதீப், தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து தன்னையும் கிச்சா சுதீப் ஏமாற்றியதாக கூறி ஹுச்சா ரஹ்மான் என்ற இன்னொரு தயாரிப்பாளரும் வழக்கு தொடர்ந்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிச்சா சுதீப் மீது வழக்கு பதிவு..!


சில நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளான எம்.என் குமார் கிச்சா சுதீப் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தன் படத்தில் நடிக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து அவர் பேசியபோது 8 வருடங்களுக்கு முன்னர் தன் படத்தில் நடிப்பதாக கூறி சுதீப் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டதாகவும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதை எதிர்த்து நடிகர் கிச்சா சுதீப்பும் தயாரிப்பாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அது மட்டுமன்றி, தன்னிடம் மன்னிப்பு கேட்டு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் தன் தரப்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரைத்தொடர்ந்து  ஹுச்சா ரஹ்மான் என்ற தயாரிப்பாளரும் வழக்கு தொடர்ந்திருந்தார். 


மேலும் படிக்க | Jailer: ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்திற்கு சிக்கல்..! ரிலீஸ் பாதிப்பா..?


தயாரிப்பாளர்கள் கூறுவது என்ன..?


கிச்சா சுதீப் மீது வழக்கு தொடர்ந்திருந்த ஹுச்சா ரஹ்மான் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சுதீப்பிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது தன் நோக்கம் இல்லை எனவும் ஆனால் இது வேறு விதமாக வெளிப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ஒரு இந்தி படத்தின் கன்னட ரீமேக் உரிமையை வாங்க 30 லட்ச ரூபாயை முதலீடு செய்ததாகவும் அதில் சுதீப்பை ஹீரோவாக நடிக்க வைக்க இருந்ததாகவும் ஆவர் கூறினார். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய அவர்,  இதற்காக அவருக்கு 5 லட்ச ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் பேசினார். இதுவரை அந்த 5 லட்ச ரூபாயிலிருந்து 1.80 லட்ச ரூபாய் மட்டுமே தனக்கு கிடைத்துள்ளதாகவும் தற்போது தான் பணக்கஷ்டத்தில் உள்ளதால் மீதி தொகையை திரும்ப கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார். 


சுதீப் கூறுவது என்ன..? 


தயாரிப்பாளர் தன் மீது விதித்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து நடிகர் கிச்சா சுதீப் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீப், “நான் அவர்கள் கூறியது போல யாரையேனும் ஏமாற்றி தவறு செய்திருந்தால் என்னால் இவ்வளவு நாள் சினிமாவில் நடித்திருக்க முடியாது. நான் இது குறித்து நீதிமன்றத்தின் விசாரணையில் பேசியுள்ளேன். இனி முடிவெடுப்பது அவர்கள் கையில்தான் உள்ளது. என் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் பதில் கூறிக்கொண்டு இருக்க முடியாது” என்று கூறினார். இந்த பிரச்சனை பல நாட்களாக நடைப்பெற்று வந்த நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் குறித்து கிச்சா சுதீப் முதன்முதலாக இப்போதுதான் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகம் சம்பளம் வாங்கும் அனிருத்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ