ட்விட்டர் ட்ரண்ட் அடிக்கும் ’கொடிவீரன்’!
சசிகுமாரின் கொடிவீரண் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரண்டில் இருந்து வருகின்றது!
இயக்குனர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் எம்.முத்தையா எழுதி இயக்குத் தமிழ் குடும்ப நாடகம் திரைப்படம் "கொடிவீரன்". சசிகுமார், மகிமாநம்பியார் முன்னணி பாத்திரத்தில் நடிக்கின்றனர். சானுஷா, வித்ரத், பாலா சரவணன், பூர்ணா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். என். ஆர். ரகுநாந்தன் இசையமைக்கின்றார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் நாள் படத்தின் டீசர் மற்றும் செப்டம்பர் 18-ஆம் நாள் பாடல்களும் வெளியானது. தற்போது இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகின்றது.
குறிப்பாக ரசிகர்கள் ட்விட்டரில் இப்படத்தினை தொடர்ந்து ட்ரண்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.