இந்த காரணங்களுக்காக தான் புஷ்பா, பேமிலி மேனில் நடித்தேன் - சமந்தா விளக்கம்!
Koffee With Karan 7: தி பேமிலி மேன் சீரிஸின் மூலம் நான் என்னுடைய மற்றொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று சமந்தா கூறியுள்ளார்.
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்ட நடிகை சமந்தா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திரைப்பயணம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் பல கேள்விகளை கரண் ஜோகர் கேட்டறிந்தார், பின்னர் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடலை தைரியமாக எப்படி ஏற்றுக்கொண்டு நடனமாடினீர்கள் என்று கேள்வியை எழுப்பினார். இந்த பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது, அதேசமயம் பாடலுக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியது அனைவருக்கும் தெரிந்ததே. தான் இந்த பாடலை ஏற்றது குறித்து சமந்தா கூறுகையில், எனக்கு அந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது, இது ஆண்களின் பார்வையை கேலி செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.
மேலும் படிக்க | பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு! தயாரிப்பு இந்த நிறுவனமா?
ஆண்களின் பார்வையை பற்றி கூறும் இந்த பாடலுக்கு ஆண்கள் தரப்பிலிருந்து அதிக எதிர்ப்பு கிளம்பியது என்பது நன்கு தெரியும். ஒரு நாட்ச் பெண்ணை தவிர வேறு யாரால் ஆண்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை சரியாக சொல்லமுடியும், நான் அந்த பாடலில் ஒரு நாட்ச் பெண்ணாக நடித்திருந்தேன். நிச்சயமாக ஒரு நாட்ச் பெண்ணால் மட்டும் தான் ஆண்களின் பார்வையை கேலி செய்து சொல்ல முடியும் என்று கூறினார். அடுத்ததாக 'தி பேமிலி மேன்' சீரிஸில் சமந்தா சிறப்பாக நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்தவர், எனக்கு ராஜ் மற்றும் டிகே பற்றி எதுவும் தெரியாது, தி பேமிலி மேன் சீசன்-1 வெளியாவதற்கு முன்னரே நான் சீசன்-2வில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இது எனக்கு மிகவும் சவாலான ஒரு கதாபாத்திரம், தென்னிந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
இதுவரை என்னை பப்லி, க்யூட்டாக பார்த்த இயக்குனர்கள் என்னை வித்தியாசமாக பார்க்க விரும்பினார்கள். இந்த சீரிஸின் மூலம் நான் என்னுடைய மற்றொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறினார். மேலும் அந்த செட்டில் சமந்தா, அக்ஷய் குமார் உடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சேர்ந்து நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் டௌடன் அப்பே இயக்குனர் பிலிப் ஜானின் 'அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ்' படத்தில் இணையவிருக்கிறார். மேலும் அவர் சாகுந்தலம், யசோதா மற்றும் குஷி போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ