இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  நமக்கு வழங்குகிறது. அவரது நிஜ வாழ்க்கைக் காட்சிகள் அவரது  வாக்குமூலம் வழியாகவும், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் ஆளுமை மற்றும் அவரது குற்றப் பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. 


இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. வீரப்பன் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ள, இந்த சீரிஸ் இதுவரையிலும் வெளியான வீரப்பன் பற்றிய டாக்குமெண்ட்ரியிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் அமைந்துள்ளது.  


‘கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸுக்கு கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான ஷோவை ZEE5 மக்கள் கூடியிருக்கும் Urban Square இல் அரங்கேற்றியுள்ளது. மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’  நல்லவனா ? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம். 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் அயலான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!


இந்நிகழ்வில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, வண்ணங்களைத் தீட்டி வீரப்பன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தனர். மேலும் ZEE5 தளத்திற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.  'கூச முனிசாமி வீரப்பன்' ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸை தீரன் புரடக்சன்ஸ் சார்பில் நக்கீரன் பிரபாவதி இந்த டாக்கு சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படப்பட்டு வருகிறது. 


'கூச முனிசாமி வீரப்பன்' 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், ZEE5100 எனும் தள்ளுபடி கூப்பனை ZEE5 தளம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன் மூலம் நீங்கள் ZEE5 தளத்தின் சந்தாவில் 100 ரூபாய் தள்ளுபடி பெறலாம். 


நெட்ஃப்ளிக்ஸில் வெளியான தொடர்:


ஜீ 5 தளத்தில் வெளியாவதற்கு முன்னர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வீரப்பன் குறித்த டாக்குமண்டரி சீரிஸ் வெளியானது. ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற பெயரில் ரிலீஸான அந்த தொடரில், அவரை பிடிக்க போலீஸார் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டனர் என்பதை காண்பித்திருந்தனர். இதில், ஒரு பக்கத்தாரின் கதையை மட்டுமே காண்பித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த தொடரை விட, ஜீ 5ல் வெளியான கூச முனிசாமி வீரப்பன் தொடர் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தது. 


மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்: வசூலில் லீடிங் யார்? மக்கள் ஆதரவு கொடுத்த படம் எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ