நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் தயாரிப்பில் உருவான படம்  கூழாங்கல். இப்படத்தை பி.எஸ்.விநோத் ராஜ் இயக்கியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூழாங்கல் திரைப்படம்:


கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தி வரும் ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. இவர்கள் 2021ஆம் ஆண்டு தயாரித்த ஒரு படம், கூழாங்கல். இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். கூழாங்கல் என்ற Pebbles படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் தந்தை-மகன் ஆகியோரின் பாச போராட்டத்தை மையப்படுத்தி இக்கதை எழுதப்பட்டுள்ளது. 


கூழாங்கல் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜெய பார்த்திபன் மற்றும் விக்னேஷ் குமுலை ஆகியோர் கூழாங்கல் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 


சர்வதேச விருதுகள்:


கூழாங்கல் திரைப்படத்தை பல சர்வதேச திரைப்ப விருதுகள் விழாவில் திரையிட்டுள்ளனர். பல விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது. நெதர்லாந்தில் நடைப்பெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் விருதில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ், புதிய இயகுநருக்கான விருதை பெற்றுள்ளார். ஆனாலும், இந்த படத்தை திரையரங்குகளில் பல காரணங்களுக்காக வெளியிட முடியாமல் போனது.


மேலும் படிக்க | அடேங்கப்பா..! விஜய் மனைவி சங்கீதாவிற்கு இவ்ளோ சொத்து இருக்கா..?



ஓடிடியில் வெளியிடு:


கூழாங்கல் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பினை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்படம் பல சர்வதேச விருதுகள் விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும் தமிழ் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால், படம் பார்த்த சிலர் இதற்கு விமர்சனம் கொடுத்தற்கு பிறகு, கூழாங்கல் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள்


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நயன்தாரா. இவர் சமீபத்தில் 9ஸ்கின் எனும் அழகு சாதன பொருட்கள் பிராண்டை தொடங்கினார். ஷாருக்கானுடன் இவர் நடித்திருந்த ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. இவர், ராகவா லாரன்ஸ் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் 2 படத்திலும் இவர் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் நடிகர் ஷ்யாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ