உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குலசாமி-திரை விமர்சனம் இதோ!
விமல் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் குலசாமி. இப்படத்தை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார்.
படத்தின் ஒன்லைன் :
படம், நாம் அனைவரும் அறிந்த நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது . கதாநாயகர் விமல், தனது தங்கை மாநிலத்தின் முதல் மாணவியாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்வு ஆகிறாள். அண்ணனின் ஆசை மருத்துவர் ஆகவேண்டும் ஆனால் தங்கை அன்னணை விட்டு பிரிய மனமில்லை. அதனால் அந்த கிராம மக்கள் உதவியுடன் கல்லூரி இருக்கும் பகுதி சென்று அங்கே ஆட்டோ ஓட்டி கொண்டு தங்கை மருத்துவ படிப்பை கவனித்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியில் தங்கைக்கு நிகழும் கொடுமை என்ன? அதனால் கதாநாயகர் விமல் எந்த மாதிரியான பாதிப்புக்கு உள்ளாகிறார்? என்பதே மீதி கதை.
படமானது கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்குயையும், பொள்ளாச்சி பாலியல் துன்புருத்தல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் தமிழக அரசியலில் மிகவும் புயலை கிளப்பிய வழக்குகள். அதை சரவணசக்தி சரியாக எடுத்து இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விமல் தனது பங்கிற்க்கு நடிப்பை கொடுத்துள்ளார். அது மட்டுமே படத்திற்க்கு போதுமா என்ற கேள்வி வருகிறது . விமலலை காமெடி படத்தில் பார்த்த நமக்கு இந்த படத்தில் சற்று வேறுவிதமாக தோன்றுகிறார். கதநாயகி தன்யா ஹோப். படத்தில் அவருக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லாதது போல் நடித்து இருக்கிறார். விமல் ஜோடி என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருக்கிறது அவருடைய நடிப்பு. படத்தின் இசை மாகாலிங்கம். பாடல் எதுவும் அந்த அளவிற்க்கு எடுபடவில்லை. பிண்ணணி இசையை படத்திற்க்கு ஏற்ப அமைத்துள்ளார். மற்ற கதபாத்திரங்களை பார்த்தால், போலிஸ் அதிகாரியாக முத்துபாண்டி வில்லனாக ஜனனி பாலு , கல்லூரி பேராசிரியையாக வினோதினி தங்களது நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். படத்தில் இருக்கும் மைனஸ்
படக்குழு. இது போன்ற கதைகளை எடுக்கும்போது, இன்னும் கவனமாக எடுக்கவேண்டும். நிஜக்கதையை மையமாக வைத்து எடுப்பவர்கள் வழக்கின் போக்கு எவ்வாறு உள்ளது போன்ற முக்கியமான விஷயங்களை படத்தில் கூறவேண்டும். இது போன்ற நிகழ்வுகளுக்கு வன்முறை முடிவு என்ற முறையில் எடுத்தால் வருங்காலங்களில் வன்முறை அதிகம் ஆவதற்கு இது ஒரு உதாரணம் ஆகிவிடும். இதைத்தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்த படத்தை குடும்பத்துடன் திரையரங்குளில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | விக்ரமின் வீடு வரை வந்த ரசிகர்..ஷாக்கான சியான்..வைரலாகும் ட்விட்டர் பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata