தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகை நயன்தாரா, கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.  தற்போது பல நடிகைகளும் இவரை போலவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கிவிட்டார்.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சிறந்து விளங்கும் இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இவரது துணிச்சலான நடிப்பினை பெண் ரசிகர்கள் பலரும் ரசிக்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விஜய் டிவிக்கு மீண்டும் செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன்?


சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'காதுவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது, இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.  தற்போது நயன்தாராவின் அடுத்த படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் முன்னர் பணியாற்றிய ஜி.கே.விக்னேஷ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு  "O2" என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி இயங்குதளத்தில் வெளியிட போவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இந்த "O2" படத்தில் யூடியூப் மூலம் பிரபலமான  குழந்தை நட்சத்திரம் ரித்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளான்.  இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர்  இசையமைத்து இருக்கிறார்.  மேலும் தமிழ் அழகன் இப்படத்திற்கு காட்சியமைக்க, செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.  மேலும் அஜித்தின் AK62 படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


 



மேலும் படிக்க | தனது படத்திற்கு தானே கதை எழுதியுள்ள தமிழ் நடிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR