உலகளவில் மிகவும் பிரலமாகவும், பண மழை பொழியும் தொடராகவும் இருக்கும் ஐபிஎல் லீக்கின் முதல் சேர்மன் லலித் மோடி, மோசடி புகாரில் இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், தன்னுடைய காதலியை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 58 வயதாகும் லலித் மோடி, தன்னுடைய பெட்டர்ஹாப் எனக் கூறி முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 25 லட்சம் ரூபாய்க்கு மனைவியாக இருக்க சொன்னார் தொழிலதிபர் - நீத்து சந்திராவின் பரிதாப நிலை



இதுதொடர்பாக லலித்மோடி எழுதியிருக்கும் பதிவில், மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய மனைவி சுஷ்மிதா சென்னுடன் சென்றிருந்தேன் எனத் தெரிவித்துள்ள அவர், புதிய வாழ்க்கை புதிய பயணம் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு டிவீட்டில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும் என கூறியிருக்கிறார் 



இருவரும் லண்டனில் வசித்து வருகின்றனர். லலித் மோடி, மினால் என்பவரை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கை 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர், லலித்மோடி தனியாக வசித்து வந்தார். இதேபோல் முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், ரோஹ்மன் ஷால் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது லலித் மோடியுடன் டேட்டிங் செய்யத் தொடங்கியிருக்கிறார். சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 46 வயதாகிறது. 


மேலும் படிக்க | பாலிவுட்டுக்கு பறந்த ’குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி.. விஷயம் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ