Latest News Actor Karthik Kumar : நடிகரும் காமெடியனுமான கார்த்திக் குமார், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இவர், பட்டியலின பெண்கள் குறித்து பேசிய ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Suchi Leaks-ம் கார்த்திக் குமாரும்! 


நடிகர் கார்த்திக் குமார் ‘யாரடி நீ மாேகினி’ படத்தில் தனுஷிற்கு நண்பராக நடித்து பிரபலமானார். இந்த படத்தில் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ போலவே வந்த இவர், இதே போன்ற கேரக்டர்களில் வெவ்வேறு படங்களில் நடித்திருக்கின்றார். இவர், 2005ஆம் ஆண்டு விஜே சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணம் இல்லை என்று கூறப்படுகிறது. 


2017ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகினரையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்தான் Suchi Leaks. ட்விட்டரில் த்ரிஷா, தனுஷ், அனிருத், ஆண்டரியா, அனுயா உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் பிரைவேட் புகைப்படங்கள் வெளியாகின. இதில் ஒரு சிலரின் அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகின. இதை தான் செய்யவில்லை என்று கூறிய சுசித்ரா, தனது கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்த சில நாட்களிலேயே கார்த்திக்கிற்கும் சுசித்ராவிற்கும் விவாகரத்து ஆனது. 2021ஆம் ஆண்டு அம்ருதா ஸ்ரீநிவாசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 


கார்த்திக் குமார் Gayவா? 


சமீபத்தில் ஒரு நேர்காணலை கொடுத்திருக்கும் சுசித்ரா, தனது முன்னாள் கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று பேசியிருக்கிறார். இவரையும் நடிகர் தனுஷையும் வைத்தும் சில ஆபாசமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். இந்த நேர்காணல் வெளியானதில் இருந்து கார்த்திக் குமார்தான் தற்போது பரபரப்பாக பேசப்படும் நபராக இருக்கிறார். 


மேலும் படிக்க | தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..


பட்டியலின பெண்கள் குறித்து…


நடிகர் கார்த்திக் குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு யாருடனோ பட்டியலின பெண்களை வைத்து ஒப்பிட்டு தவறாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த ஆடியாே வெளியானதில் இருந்து இவர் குறித்த சர்ச்சைகள் இன்னும் பெரிதாகிக்கொண்டே போகிறது. 



அது எனது வாய்ஸ் இல்லை..


தற்போது கார்த்திக் குமார் பேசியதாக கூறப்படும் ஆடியோ, இணையத்தில் வைரலாவதை தொடர்ந்து கார்த்திக்கிற்கு எதிரான கருத்துகளை பலர் தெரிவித்து வருகின்றனர். அவர், இது குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.



அந்த வீடியோவில் அது எது வாய்ஸ் இல்லை என்று கூறும் அவர் தான் அந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கவே மாட்டேன் என்றும், நீங்கள் எதை நம்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நம்பிக்கொள்ளுங்கள் என்றும் பேசியிருக்கிறார். 


மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ