“நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

Actor Karthik Kumar Reply To Singer Suchitra : நடிகரும் Stand Up காமெடியனுமான கார்த்திக் குமார், தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என சுசித்ரா கூறியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : May 15, 2024, 01:42 PM IST
  • தொடரும் சுசி லீக்ஸ் சர்ச்சை!
  • முன்னாள் கணவரின் பாலியல் விருப்பம் மீது குற்றச்சாட்டு..
  • தக்க பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்..
“நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ.. title=

Actor Karthik Kumar Reply To Singer Suchitra : பிரபல நடிகர் கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவியும் பாடகியுமான சுசித்ரா, சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி திரையுலகினரையும் சினிமா ரசிகர்களையும் அதிர வைத்திருக்கிறது. தனது முன்னாள் கனவரை தன் பாலின ஈர்ப்பாளர் என்று கூறிய சுசித்ரா, கூடவே தனுஷ் குறித்த சர்ச்சையான தகவல்களையும் கூறினார். இது குறித்த முழு விவரத்தினை இங்கு பார்ப்போம். 

சுசி லீக்ஸும் தொடர்ந்து வந்த பிரச்சனைகளும்..

2017ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த வைரல் பகிர்வு, ‘Suchi Leaks’. காேலிவுட் செலிப்ரிட்டிகளின் தனிப்பட்ட பிரைவேட் புகைப்படங்கள், பின்னணி பாடகி சுசித்ராவின் கணக்கிலிருந்து பகிரப்பட்டது. தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, டிடி, அனுயா, த்ரிஷா, ராணா டகுபதி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் இதில் பகிரப்பட்டன. இதையடுத்து, தான் இந்த புகைப்படங்களை பகிரவில்லை என்று தெரிவித்த சுசித்ரா தனது கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு சினிமா வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சமயத்தில் கார்த்திக் குமாருடன் திருமண உறவில் இருந்த இவர், 11 ஆண்டு கால வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டார். 

வைரலாகும் நேர்காணல்..

சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு சில நடிகர்-நடிகைகள் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வைரலாகி வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது ஒரு தனியார் ஊடகத்திற்கு கொடுத்திருக்கும் நேர்காணல் வைரலாகி வருகிறது. Suchi Leaksற்கு காரணம், ஒரு Prankதான் என்றும், விளையாட்டாக சில நடிகர்-நடிகைகள் அந்த போட்டோக்களை பகிர்ந்ததாகவும் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்

தனுஷ் குறித்த சர்ச்சை பேச்சு..!

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே திருமண உறவில் இருந்த போதே வெவ்வேறு நபர்களை டேட்டிங் செய்ததாகவும், ஐஸ்வர்யா ஒரு நல்ல தாயே இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், தனுஷை தன் பாலின ஈர்ப்பாளர் (Gay) என்று கூறிய அவர், போதை பொருள் உபயாேகிக்கும் பழக்கமும் தனுஷிற்கு இருப்பதாக தெரிவித்தார். 

முன்னாள் கணவர் குறித்து பேச்சு..

நடிகரும் மேடை கலைஞருமான கார்த்திக் குமாருக்கு 2021ஆம் ஆண்டு துணை நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனுடன் திருமணம் நடைப்பெற்றது. இவர், கார்த்திக்கை திருமணம் செய்து பெரிய தவறிழைத்து விட்டதாக கூறிய சுசித்ரா, அவரையும தனுஷையும் Gay என்று கூறினார். இதனால்தான் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும் சுசித்ரா குற்றம் சாட்டினார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthik Kumar (@evamkarthik)

கார்த்திக் குமார் பதிலடி..!

நடிகர் கார்த்திக் குமார், தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்களில் மிகவும் கூலான ஒருவர் என்று ரசிகர்களால் கூறப்படுகிறது. இவர், சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தான் LGBTQI சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தால் அது குறித்து பெருமைப்படுவேன் எனவும், அதை ஒப்புக்கொள்வதில் தனக்கு எந்த வித அசிங்கமோ அவமானமோ இல்லை என்று கூறியிருக்கிறார். சுசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | ரஜினியின் கூலி படத்திற்கு 60 கோடி சம்பளம் வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News