நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கமலின் பெரிய பட்ஜெட் படம்! எது தெரியுமா?
Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Kamal Haasan Movie Direct OTT Release : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் கமல்ஹாசன். இவர் நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படம் ஒன்று தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படம் என்ன என்பதையும், அதை ஏன் ஓடிடியில் வெளியிட படக்குழு வெளியிட முடிவு செய்திருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.
கமல்ஹாசனின் பெரிய பட்ஜெட் படம்:
கோலிவுட் திரையுலகின் மூத்த நடிகராகவும், பெரிய நட்சத்திரமாகவும் விளங்குபவர் கமல்ஹாசன். தனித்துவமான நடிப்பு மட்டுமன்றி, ஒவ்வொரு படத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும் மெனக்கெடல்களுக்காகவும் பெரிதாக அறியப்படுகிறார். இதனால், கமல்ஹாசனை பலர் ‘உலக நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார். கமல்ஹாசனின் நடிப்பில் உருவான பல படங்கள், வெளியான போது பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு பொக்கிஷமாக கருதப்பட்டன.
கமல், இதுவரை பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், இயக்குநர் ஷங்கருடன் அவர் கைக்கோர்த்த திரைப்படம்தான், இந்தியன். 1996ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அப்போது பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து, அப்படத்தின் 2ஆம் பாகம் வெளியானது.
இந்தியன் 2:
ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம், கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 5 வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைப்பெற்ற நிலையில், இதன் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. படக்குழுவும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை ப்ரமோட் செய்தனர். ஆனால், படம் அந்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் நெகடிவான விமர்சனங்களை தெரிவித்தனர். படத்தின் கதை, கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பழையமையானது என்பது, இந்த தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சிலர் கருத்துகளை தெரிவித்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்த இந்தியன் 2 திரைப்படத்தின் பட்ஜெட் சுமார், 300 முதல் 250 கோடி என்று கூறப்பட்டது. பிரத்யேகமான காட்சிகள், பிரம்மாண்ட செட், வெளிநாட்டில் ஷூட்டிங், படத்தில் பிரபல நடிகர்கள் படத்தில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், இவ்வளவு கோடி செலவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
மேலும் படிக்க | Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?
3ஆம் பாகம்..
இந்தியன் 2 படத்தின் இறுதியில் இடம் பெற்றிருந்த இந்தியன் 3 படத்தின் டிரைலர்தான் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலர் தெரிவித்தனர். அதில், சேனாபதியின் ஃப்ளாஷ் பேக் காட்சி இடம் பெற்றிருந்ததாகவும், அது பிரம்மாண்டமான வகையில் காட்சிப்படுத்த பட்டிருந்ததாகவும் படம் பார்த்தவர்கள் கூறினர். இதனால், இந்தியன் 3 படத்தை தியேட்டரில் காண்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
ஓடிடியில் ரிலீஸ்?
இந்தியன் படத்தின் 2 மற்றும் 3ஆம் பாகங்கள் ஒன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டன. 5 முதல் 5 அரை மணி நேர படமாக எடுத்துவிட்டு, அதை 2 மணி நேரம் 40 நிமட படங்களாக மாற்றி இரண்டு பாகங்களாக தியேட்டர்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி, இந்தியன் 2 படம் முதலில் தியேட்டரில் வெளியானது. ஆனால், படக்குழு எதிர்பார்த்தபடி படம் வெற்றி பெறாததால், இந்தியன் 3 படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் ஓடிடியில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | கோட் உள்பட பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ