Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?

Vaazhai OTT Release : மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழை திரைப்படம் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 26, 2024, 10:42 AM IST
  • வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ்
  • எப்போது? எந்த தளத்தில் பார்க்கலாம்?
  • மாரி செல்வராஜின் அற்புத படைப்பு!
Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?  title=

Vaazhai OTT Release : தமிழ் திரையுலகின் விருப்பமிகு இயக்குநராக மாரி வருபவர் மாரி செல்வராஜ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், வாழை. இந்த படத்தில் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த வாழை:

பரியேறும் பெருமாள் எனும் படைப்பை கொடுத்து அனைவரையும் மிரள செய்தவர் மாரி செல்வராஜ். அடுத்து அவர் தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் திரைப்படமும், பலதரப்பு ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சியையும், எழுச்சியையும் தூண்டியது. கடந்த ஆண்டு, மாமன்னன் படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் எந்த ரசிகர்களை சென்று சேர வேண்டுமோ அவர்களை சரியாக சென்றடைந்தது. அந்த வகையில், மாரி செல்வராஜ் சமீபத்தில் இயக்கியிருக்கும் படம், வாழை. 

வாழை திரைப்படம், கடந்த 23ஆம் தேதி வெளியானது. அதற்கு முன்னரே பத்திரிக்கையாளர்களுக்கான ஷோவும், செலிப்ரிட்டிக்களுக்கான ஷோவும் வைக்கப்பட்டன. இந்த படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களில் இருந்து, சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டு பாராட்டினர். இயக்குநர் பாலா, சூரி, தங்கதுரை உள்ளிட்டோர் உணர்ச்சி பொங்க அழுதுகொண்டே மாரி செல்வராஜை பாராட்டியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

ஓடிடி ரிலீஸ்:

இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளிலேயே ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்து விட்டது. இதனால், தியேட்டரில் வெளியாகும் படங்களும் சில வாரங்களுக்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான வாழை திரைப்படமும் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாகின்றது. 

மேலும் படிக்க | வாழைத்தாரின் வாழ்வை கூறிய வாழை படம்! திரை விமர்சனம்...

வாழை திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனமும், மாரி செல்வராஜின் நவ் வி ஸ்டுடியோஸ் நிறுவனமும் சேர்ந்துதான்  வெளியிட்டது. இதையடுத்து, இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளமே பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. வாழை படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமைகள் இந்த நிறுவனத்திடம் இருப்பதால், இது அந்த தளத்திலேயே வெளியாகலாம். தற்போது வரை வாழை படம், நல்ல விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. வெளியான மூன்று நாட்களிலேயே இப்படம் 3 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வாழை படத்தின் இதே நிலை தியேட்டர்களில் தொடர்ந்தால், இன்னும் 1 மாதத்திற்கு ஓடிடியில் இப்படம் வெளியிடப்படாதாம். இடையில் இப்படத்தின் வசூல் மந்தமாகும் போது, இதனை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்தில், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகிறது. எனவே, அடுத்த மாதத்திலேயே வாழை படத்தின் ஓடிடி வருகையை எதிர்பார்க்கலாம்.

இயக்குநர்கள் வாழ்த்து:

வாழை படம், பள்ளி குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் பார்த்து மாரி செல்வராஜிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து, இந்த இயக்குநர்களின் ரசிகர்களும் வாழை படத்தை பார்க்க திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து இயக்கி வரும் ‘பைசன்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். இதையடுத்து, தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார், மாரி செல்வராஜ். 

மேலும் படிக்க | வாழை vs கொட்டுக்காளி! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? எந்த படம் ஹிட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News