Actor Karthi Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (மே 25 ஆம் தேதி) நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த இரத்த தானம் முகாமில் சுமார் 150 பேர் இரத்த தானம் செய்தார்கள். 


மேலும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த 100 குழந்தைகளுக்கு உடை மற்றும் தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் கொடுத்து இருக்கிறார்கள்.


கார்த்தியின் ரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அன்னதானம், நீர் மோர் வழங்குதல், ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்


கார்த்தி படத்தின் அப்டேட்டுகள்:


தமிழ் திரையுலகின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் தோல்வியில் முடிந்தன. குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது ஜப்பான் திரைப்படம் பெரிய அளவில் மண்ணை கவ்வியது. இதையடுத்து, அவரது 27வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படம், நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். அதே சமயத்தில் அவரது இன்னொரு படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு வா வாத்தியாரே என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.



வா வாத்தியார் படத்தின் அறிவிப்பு:



கார்த்தி, இந்த வருடம் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அடுத்து, சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிக்க சைன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | அஜித்தின் 64வது படத்தை இயக்கப்போவது யார்? போட்டியில் 3 பெரிய இயக்குநர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ