Kanguva Movie Karthi Cameo : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தமிழ் மொழியில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் பேண்டஸி திரில்லர் திரைப்படம் இது. இதில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா திரைப்படம்:


கோலிவுட் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் சூர்யா. வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். நடிப்பதாக கூறிய சில படங்களும் டிராப் ஆகின்றன. விக்ரம், சர்ஃபிரா போன்ற படங்களில் கேமியா கதாபாத்திரத்தில் நடித்த இவர், ஹீரோவாக நடித்து வரும் பெரிய படம் கங்குவா. 


அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம், வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அடித்து சூர்யாவை வைத்து வே கங்குவா படத்தையும் இயக்கி வருகிறார். எப்போதும், வித்தியாசனமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா, சிறுத்தை சிவா கூறிய கங்குவா கதைக்கும் ஒகே கூறிவிட்டார். ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமான இது, இந்திய சினிமாவில் புதிய கதையாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


மேலும் படிக்க | பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!


கங்குவாவில் கேமியோ:


கங்குவா திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக, திஷா பதானி நடித்து வருகிறார். இவர்களுடன் சேர்ந்து, ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் வில்லனாக வருகிறார் பாபி டியோல். அனிமல் திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமான இவர், தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்திலும் இவரது கதாப்பாத்திரம் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 


சமீப காலமபாக வெளியாகி வரும் இந்திய திரைப்படங்களில் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களின் லிஸ்ட் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் மட்டும் எண்ணிலடங்கா பிரபலங்கள் கேமியோ கதாப்பாத்திரமாக வந்தனர். இந்த நிலையில், கங்குவா படத்திலும் ஒரு நடிகர் கேமியோ ரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் சொந்த தம்பி கார்த்திதான். 


கதாப்பாத்திரம் என்ன? 


கங்குவா பட வில்லன் பாபி டியோலின், இரண்டாவது மனைவியின் மகனாக கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே காஷ்மோரா படத்தில் ராஜா வேடத்தில் நடித்திருந்த கார்த்திக்கு, கங்குவா படத்திலும் இதே போன்ற வேடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, இவர் வில்லனுக்கு மகனின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் இவரும் வில்லனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


தம்பியின் படத்தில் அண்ணன் கேமியாே..


கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம், கைதி. எல்.சி.யுவில் இடம் பெற்றிருக்கும் இந்த படத்துடன் விக்ரம் படமும் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அது போலவே அவரது தம்பியும் கங்குவா படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சூர்யா கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | கங்குவா படத்தின் முதல் விமர்சனம்: மெய்சிலிர்த்த பாடலாசிரியர் விவேகா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ