சூர்யாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

Suriya Net Worth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் இந்த ஆண்டு படு பிஸியான நடிகராக வலம் வந்திருக்கும் நடிகர் சூர்யாவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். ​

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2024, 01:35 PM IST
  • கோலிவுட் உலகில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.
  • வித்தியாச கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர் சூர்யா.
  • சூர்யா சொத்து மதிப்பு எவ்வளவு.
சூர்யாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? பெரிய கோடீஸ்வரர் தான் பா title=

Suriya Net Worth Details: பழம் பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யாவின் பிறந்தநாள் இன்று. அதன்படி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா:
கோலிவுட் உலகில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. திரைத்துறையில் பெரிய கலைஞராக விளங்கிய சிவகுமாரின் மகனான இவரும், சினிமா கனவுகளுடன்தான் வளர்ந்தார். 22 வயதில் ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா தொடர்ந்து மென்மையான ஹீரோவின் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். விஜய்-அஜித்திற்கு எந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே கூட்டம் இவருக்கும் இருக்கிறது. 

வித்தியாச கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர் சூர்யா:
காதல்-காமெடி-கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக தனது கதை செலக்ஷனில் வித்தியாசம் காட்டி வருகிறார். சூரரை போற்று படமும், ஜெய் பீம் படமும் அதற்கு பெரிய உதாரணம். தனது படங்கள் மூலம் சமூக கருத்து பேசி வரும் இவர், பொது வெளியிலும் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு ‘அறம்’ அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். 

அது மட்டுமன்றி, இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் வகையில் இருக்கின்றன. எனவே, தொடர்ந்து பல தமிழ் சினிமா இயக்குநர்களும் இவரிடம் கதை கூறும் முனைப்பில் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | ஆஹா தியேட்டரில் Fire தான்.. கங்குவா படத்தின் ட்விஸ்ட் அப்டேட்

2 ஆண்டுகளாக படங்கள் வெளியாகவில்லை:
நடிகர் சூர்யா, கடைசியாக கதாநாயகனாக நடித்திடிருந்த படம், எதற்கும் துணிந்தவன். இந்த படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ஹிட் அடித்தாலும் விமர்னத்தில் கொஞ்சம் சறுக்கியது. அதன்படி பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு கமலின் விக்ரம் படத்தில் 7 நிமிட கேமியோ ரோலில் நடித்தார், அதன் பிறகு மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கட்டரி படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கதையின் நாயகனாக இவரது படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. 

சூர்யா 44 - கங்குவா:
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சூர்யா நடிக்கவிருக்கும் அவரது 44வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்தியின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

இந்தப் படத்துடன் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. படத்தில் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, தீபா வெங்கட், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் கங்குவா படம் 10 இந்திய மொழிகளில் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சூர்யா சொத்து மதிப்பு எவ்வளவு:
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய சொத்து மதிப்பு ரூ. 350 கோடி இருக்கும் என்றும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி விளம்பரங்களில் நடிக்க இவர் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

சூர்யாவின் கார் கலெக்ஷன்ஸ்:
சூர்யா (Suriya luxurious Cars), BMW 7 Series கார், ஆடி Q 7, Mercedes BenZ M Class உள்ளிட்ட சில சொகுசு கார்களை வைத்துள்ளார். இதில், BMW 7 Series காரின் விலை, ரூபாய் 1.38 கோடி எனவும், Audi Q 7 கார், ரூ.80 லட்சம் எனவும், Mercedes BenZ M Class காரின் விலை ரூ.60 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இது தவிர, அவரது மும்பை அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.70 கோடி மதிப்பு மிக்கது எனவும் கூறப்படுகிறது. சென்னையிலும் சூர்யாவிற்கு வீடு இருப்பதாகவும், இதன் மதிப்பும் பல கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News