The GOAT Vijayakanth AI Voice Actor : வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடித்து வெளிவந்த படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, பல்வேறு தமிழ் திரைப்பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் AI உபயாேகப்படுத்தப்பட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கோட்:


தமிழ் திரையுலகின், கமர்ஷியல் இயக்குநராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர், விஜய்யுடன் முதன்முதலாக கைக்கோர்த்த திரைப்படம், தி கோட். வழக்கமாக விஜய் படம் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் விஜய்யின் லுக், ரசிகர்களை ஆரம்பத்திலேயே ஏமாற்றத்திற்குள்ளாக்கிறது. விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பலர் படத்தை பார்த்தனர். ஆனால், பலரை ஆச்சரியப்படுத்தி ஹிட் அடித்து விட்டது, தி கோட் படம். 


தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி, சினேகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜெயராம், லைலா, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 


விஜயகாந்தின் AI:


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், தேமுதிக நடிகருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் மீது, நடிகர் விஜய்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பது பலருக்கு தெரியும். இதையடுத்து, தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI உபயோகப்படுத்த பட்டிருந்தது. இதற்கு ரெஃபரன்ஸாக, கேப்டன் பிரபாகரன் பட விஜயகாந்தை எடுத்துக்கொண்டனர். இதில், விஜயகாந்த், டைலாக் பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. 


மேலும் படிக்க | தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?


இவர்தான் வாய்ஸ் கொடுத்ததா?


தி கோட் படத்தில் விஜயகாந்தின் முகம் ஏஐ செய்யப்பட்டது போல, அவரது வாய்ஸும் ஏஐ செய்யப்பட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால், இதற்கு ஒரு பிரபல நடிகர் மிமிக்கிரி வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா? ‘குட்நைட்’ பட புகழ் மணிகண்டன்தான். 



இவர், ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “கலக்கப்போவது யாரு?” நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக இருந்தார். அடுத்து அதே நிகழ்ச்சியில், போட்டியாளராகவும் பங்கேற்றார். பல நடிகர்களின் குரலில் மிமிக்கிரி பேசி அசத்துவது, இவரது ஹாபி. இதையடுத்து ஒரு சில படங்களில் உதவி எழுத்தாளராக இருந்தார். பின்பு துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று பிரபல ஹீரோவாக இருக்கிறார். 


இவர்தான், தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். படத்தில் அந்த குரலை கேட்ட போது பலர் இது பழைய விஜயகாந்தின் குரல்தான் என்று நினைத்தனர். ஆனால், மணிகண்டன்தான் அந்த குரலுக்கு பின்னால் இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் பலர் வாயடைத்து போயிருக்கின்றனர்.


தி காேட் படம் எப்படி?


வெங்கட் பிரபு படம் என்றாலே, அதற்கு பின்னால் கமர்ஷியல் சார்ந்த விஷயங்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல, பல தி கோட் படத்திலும் ரசிக்கும் படியான பல கமர்ஷியல் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. எதிர்பாராத காமியோ கதாப்பாத்திரங்கள், துள்ள வைக்கும் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. லாஜிக் இல்லாமல், ஒரு விஜய் படத்தை நன்றாக கொண்டாட வேண்டும் என்று நினைத்தால், இப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். 


மேலும் படிக்க | தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ