நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்!! நாகார்ஜுனாவின் ஸ்பெஷல் மெசஜ்..
Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Photos : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-சோபிதா துலிபலாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்களை நாகார்ஜுனா பகிர்ந்திருக்கிறார்.
Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Photos : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவருக்கும் நடிகை சோபிதா துலிபலாவிற்கும் ஆகஸ்டு 8ஆம் தேதியான இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நாகார்ஜுனா பதிவு:
நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, தனது மகனின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து பதிவிட்டிருக்கிறார். அதில், காலை 9:42 மணியளவில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததாகவும், சோபிதாவை தங்களின் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பெரிய காதலின் சிறிய தொடக்கம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் ரியாக்ஷன்:
நாக சைதன்யாவின் திருமண அறிவிப்பை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஒரு சிலர், இவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல, இன்னும் சிலர் சமந்தா இதை பார்த்தால் வருத்தப்படுவார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனால் இன்னும் இரண்டு நாளைக்கு நாக சைதன்யாவும் சோபிதாவும்தான் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கிள் இருப்பர் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
ஆடையை மாற்றிய சமந்தா! அதே தேதியில் திருமணம் செய்த நாக சைதன்யா!
நடிகை சமந்தா, சில மாதங்களுக்கு முன்பு, தனது வெள்ளை நிற திருமண ஆடையை ரீ-டிசைன் செய்து, முற்றிலும் வடிவமைப்பை மாற்றினார். வெள்ளை நிறத்தில் இருந்த ஆடையை கருப்பு நிறத்தில் மாற்றி ஒரு போட்டோ ஷூட்டையும் செய்தார். இந்த நிலையில், இன்றைய தினம் சமந்தா, நாக சைதன்யாவிற்கு திப்ரப்போஸ் செய்த நாள் என கூறப்படுகிறது. அந்த தினத்தையே தற்போது தனது புதிய உறவை தொடங்குவதற்காக நாக சைதன்யா தேர்ந்தெடுத்து திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சமந்தாவை ரிவஞ்ச் எடுக்கும் வகையில் அவர் இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
விவாகரத்தில் முடிந்த நாக சைதன்யா-சமந்தாவின் காதல்:
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இருவருக்கும், விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்தான் முதல் படம். பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். 2017ஆம் ஆண்டு இவர்களின் காதல், திருமணத்தில் முடிந்தது. இவர்களின் திருமண வாழ்க்கையில் சில மாதங்களிலேயே புயல் வீச தொடங்கியதாகதை அடுத்து இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக, இருவருக்கும் 2021ஆம் ஆண்டு விவாகரத்தும் நடந்தது. இதன் பிறகு, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பார்த்துக்கொண்டாலும், யாரோ போல கடந்து செல்வதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், தற்போது சோபிதாவை இவர் கரம் பிடிக்க இருப்பது குறித்து பலர் கலவையான கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | Samantha: சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ