Latest News Nepolean Son Wedding : கோலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் பல கிராமத்து கதை படங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். இவருடைய மகனுக்கு இப்பாேது திருமணம் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராமத்து ஹீரோ நெப்போலியன்!


திருச்சியில் இருந்து சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த நடிகர்களுள் ஒருவர் நெப்போலியன். 27 வயதில் தமிழ் சின்னிமாவிற்குள் நுழைந்த இவர், முதன் முதலில் நடித்து புது நெல்லு புது நாத்து படம் மூலமாகத்தான். இந்த படத்தில் அவர் நாயகனாக நடிக்கவில்லை, வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எடுப்பட்டி ராசா உள்ளிட்ட கிராமத்து கதைகளும் அதில் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களும் இவருக்கு பெரும் புகழை எற்று தந்தது. 


திமுக-அரசியல் கட்சியின் கொள்கைகளை பின்பற்றி வளர்ந்த இவர், ஒரு கட்டத்தில் தனது உறவினரும் அமைச்சருமான கே.என்.நேரு மூலம் கட்சியிலும் இணைந்தார். கலைமாமணி விருது பெற்ற நெப்போலியன் கிட்டத்தட்ட 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டு, குணச்சித்திர கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அது கைக்கொடுக்க, அப்படியே வருடத்திற்கு ஒரு படம் என்று தற்போது நடித்து வருகிறார்.  தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | ஹாலிவுட்டில் அசத்தும் நெப்போலியன்... விரைவில் டிஜிட்டல் தளத்தில் படம் வெளிவரவுள்ளது!


அமெரிக்காவில் செட்டில்!


நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குணால்-தனுஷ் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், அவரது இளைய மகன் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். அவர், Muscular dystrophy எனும் தசை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, தன் மகனுக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார் நெப்போலியன். அது மட்டுமன்றி, தன் மகன் பாேலவே பாதிப்படைந்திருப்பவர்களுக்காக ஒரு பள்ளியையும் திறந்திருக்கிறாராம். நெப்பாேலியன், நடிகர் என்பதை தாண்டி, ஒரு ஐடி நிறுவனத்தையும் வைத்து நடத்தி வருகிறார். 


மகனுக்கு திருமணம்:


நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. தன் மகனின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று பத்திரிகை கொடுத்திருக்கிறார் நெப்போலியன். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவி, தன் மகன் தனுஷுக்கும் அக்‌ஷ்யா என்ற பெண்ணுக்கு ஜூலை 2ஆம் தேதி காலை நிச்சயதார்த்தம் நடந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். 


திரையுலகில் ஆக்டிவாக இல்லை என்றாலும் நடிகர் நெப்போலியன் சமூக வலைதளங்களிலும் சமூக தொண்டு செய்வதிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் வாழ்க்கை குறித்து மிகவும் பிரபலமானது, உணவு விமர்சகர் இர்ஃபான் இவரது இல்லத்திற்கு சென்று வ்ளாக் செய்த பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நடிகர் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வீடா? வாயடைத்துப்போன ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ