Actor Rajinikanth Name In Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் கூலி, இதில் அவரது பெயர் குறித்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினியின் பெயர்:


நடிகர் ரஜினிகாந்தின் பெயர், இப்படத்தில் தேவா.



இது, பிரபல தமிழ் இசையமைப்பாளர் தேவாவின் பெயர் என்பதை பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். தளபதி படத்தில் ரஜினிக்கு உயிர் நண்பனாக நடித்த மம்மூட்டிக்கும் அப்படத்தில் பெயர் தேவராஜ் என்கிற தேவா என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்


கூலி:


ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகியிருக்கிறது, கூலி. இந்த படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில், எதிரிகள் பலர் தங்கங்களை பதுக்க, அவர்களை துவம்சம் செய்து ஸ்டைலாக டைலாக் பேசும் நாயகனாக வந்தார் ரஜினிகாந்த். மேலும், தான் பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் பேசிய “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்..” என்ற பெரிய டைலாக்கையும் இந்த டீசரில் பேசியிருந்தார். 



இது, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்திற்கான வேலைகளை சைலண்டாக பார்க்க ஆரம்பித்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் முக்கிய கதாப்பாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வந்தன.


நடிப்பது யார் யார்?


கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து பான்-இந்திய நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். முதலில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இவர் இதில், ‘சைமன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல,  மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் புகழ் பெற்ற சௌபின் சாஹிர் கூலி படத்தில் ‘தயாள்’ எனும் கதாப்பாத்திரமாக வருகிறார். தொடர்ந்து, சத்யராஜ் ராஜசேகர் எனும் கதாப்பாத்திரத்திலும், கன்னட நடிகர் உப்பேந்திரா ‘கலீஷா’ எனும் கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர். நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன்,  ‘பிரீத்தி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது, ரஜினிகாந்தின் மகள் கதாப்பாத்திரம் என கூறப்படுகிறது. 


இந்தி நடிகர் இருக்கிறாரா?


கூலி படத்தில் ஒரு பிரபல இந்தி நடிகரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, அமீர் கான்தான். இவரது போஸ்டர் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக ரஜினியின் பெயர் குறித்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதனால், இவர் இப்படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.


மேலும் படிக்க | Coolie Cast : கூலி படத்தில் புதிதாக இணையும் ‘அந்த’ இந்தி நடிகர்!! யாருன்னு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ