'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்

Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 31, 2024, 04:44 PM IST
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி.
  • கம்பு சுத்தும் ஸ்ருதிஹாசன்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன் title=

Latest News Coolie Movie : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில்  தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி:
கோலிவுட் திரையுலகில், வெகு சில படங்களே இயக்கி இருந்தாலும் மடமடவென முன்னணி இயக்குநராக வளர்ந்து நிற்பவர், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர், கைதி படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கினார். கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படமும் பெரிய ஹிட் அடித்தது. போதாக்குறைக்கு இவர் உருவாக்கிய ‘லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ கான்செப்டும் ஹிட் அடித்தது. தொடர்ச்சியாக படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் ரஜினியுடன் கைக்கோர்க்கும் வாய்ப்பையும் பெற்றார் லோகேஷ் கனகராஜ். தற்போது, ரஜினியின்171வது படமான கூலி படத்தை இயக்குகிறார். 

கூலி திரைப்படம்:
கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். அன்பரிவ், சண்டை கலைஞர்களாக இருக்கின்றனர். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதே இதன் மீது எதிர்பார்ப்பும் பெருகியது. கூலி படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினி பல வருடங்களுக்கு முன்னர் தனது படத்தில் பேசிய “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்..” என்ற டைலாக்கை பேசியிருக்கிறார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

மேலும் படிக்க | Radhika : கேரவனில் ரகசிய கேமரா..பயந்து பாேன ராதிகா சரத்குமார்! நடந்தது என்ன?

இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் ப்ரீத்தி என்னும் கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

கம்பு சுத்தும் ஸ்ருதிஹாசன்:
உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி... அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. 

சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார்.  இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, '' எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News