அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?
Rajinikanth Talks About Amaran Movie : சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.
Rajinikanth Talks About Amaran Movie : 2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய சம்பவம், புல்வாமா தாக்குதல். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, உருவாக்கப்பட்ட படம்தான், அமரன். அந்த தாக்குதலின் போது மக்களை காக்க, தன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது, அமரன் படம்.
மக்களின் வரவேற்பை பெற்ற அமரன்!
மேஜர் முகுந்தின் கதாப்பாத்திரத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில், சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை என்ன என்பது, படம் பார்ப்பதற்கு முன்னரே அனைவருக்கும் தெரியும். கிளைமேக்ஸ் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். அனைத்திற்கும் தயாராகி படம் பார்க்க மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு சென்றாலும், இறுதியில் மனதை கனக்க செய்கிறது திரைப்படம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளியான இந்த படத்தை பார்த்த பலர் தற்போது பாராட்டி வருகின்றனர்.
ரஜினிகாந்த் பாராட்டு..
அமரன் திரைப்படத்தை பொதுமக்கள் மட்டுமல்ல, பல்வேறு சினிமா பிரபலங்களும் பார்த்து, பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை, தற்போது ரஜினிகாந்தும் பார்த்து, படக்குழுவை சந்தித்து பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கும் ரஜினி, கமல்ஹாசனை இப்படத்தை எடுத்ததற்காக பாராட்டுவதாக கூறியிருக்கும் அவர், அந்த படத்தை ராஜ்குமார் இயக்கிய விதம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவே வாழ்ந்திருப்பதாகவும், இது அவரது கெரியரிலேயே பெஸ்ட் படம் என்றும் கூறியிருக்கிறார். சாய் பல்லவி நன்றாக நடித்துள்ளதாக கூறியிருக்கும் அவர், படத்தை பார்த்து முடிக்கும் போது தன்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை என்று கூறியிருக்கிறார் ரஜினி.
தொடர்ந்து பேசிய ரஜினி, தனது அண்ணன் நாகேஸ்வர ராவ் மிலிட்டரியில் 14 வருடங்கள் இருந்ததையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், இந்த படம் தனக்கு மிகவும் பர்சனல் ஆக இருந்ததாகவும் பேசியிருக்கிறார். இறுதியில், இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
அமரன் பட வெற்றிக்கு காரணம் என்ன?
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் பல, மக்கள் மத்தியில் அந்தளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. ஒரு சில படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக தோல்வியடைய, ஒரு சில படங்கள் வசூலில் வெற்றி பெற்றாலும் விமர்சனத்தில் தோற்றன. ஆனால் அமரன் படம், இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறது. காரணம், இது உண்மைக்கதை என்பதும், அதை வேகமான திரைக்கதையுடன் சொன்ன விதமும்தான்.
கதையை தாண்டி, படத்திற்கு உயிர் கொடுத்த கதாப்பாத்திரம், இந்து ரெபேக்கா வர்கீஸ். இந்த பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார். இதைத்தாண்டி, இசை மற்றும் காட்சியமைப்புகளும் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
100 கோடி வசூல்..
அமரன் திரைப்படம், தற்போது உலகளவில் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், இனி வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ