அமரன் ரியல் ஹீரோ... மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த 'ராஷ்டிரிய ரைபிள்ஸ்' எதற்கு தெரியுமா?

Rashtriya Rifles: மேஜர் முகுந்த் வரதராஜன் செயலாற்றிய ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இந்த தொகுப்பை வாசிக்கவும்...

Written by - Sudharsan G | Last Updated : Nov 2, 2024, 01:42 PM IST
  • அமரன் திரைப்படம் இவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
  • அமரன் திரைப்படம் அவரின் ராணுவ வாழ்க்கையும் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்வையும் பதிவு செய்துள்ளது.
  • மேஜர் முகுந்த் 2014ஆம் ஆண்டு உயிர்நீர்த்தார்.
அமரன் ரியல் ஹீரோ... மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த 'ராஷ்டிரிய ரைபிள்ஸ்' எதற்கு தெரியுமா?  title=

Major Mukund Varadharajan, Rashtriya Rifles Full Details: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் (Amaran Movie) வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் இத்தனை கவனத்தை பெற்றதற்கு முக்கிய காரணம், இது உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது என்பதால்தான்...

ஆம்... இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) படைப்பிரிவின் தலைவராக இருந்து பணியிலேயே உயிர்நீத்த தியாகி மேஜர் முகுந்த் வரதராஜனின் (Major Mukund Varadharajan) வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இதில் அவரின் ராணுவ வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்வையும் உணர்வுபூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் ராணுவ பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவரின் தாத்தா மற்றும் இரண்டு மாமாக்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். அவர்களை முன்னுதாரணமாக வைத்தே முகுந்த் ராணுவத்தில் இணைந்து, நாட்டைக் காக்க எல்லைக்கு சென்றுள்ளார். 

மேஜர் முகுந்தின் கடைசி நிமிடங்கள்

இவர் 2006ஆம் ஆண்டில் சென்னையில் ராணுவ பயிற்சியை முடித்த உடன் 22 ராஜ்புத் ரெஜிமெண்ட் படைப்பிரிவில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்பட்டார். ராஜ்புத் ரெஜிமண்ட் என்பது இந்திய ராணுவத்தின் பழமையான படைப்பிரிவு எனலாம். இதில் இணைந்த ஏழே மாதங்களில் அவர் கேப்டனாக பதிவு உயர்வு பெற்றார். 2012ஆம் ஆண்டில் மேஜராக பதவி உயர்வு பெற்ற பின்னர் ராஷ்டிரிய ரைபில்ஸின் 44ஆவது பட்டாலியனில் மேஜர் முகுந்த் இணைந்தார்.  தொடர்ந்து இவர் பல்வேறு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றிகளை ருசித்தவர். 

மேலும் படிக்க | அமரன் பட நிஜ ஹீரோ மேஜர் முகுந்த்..! அவரின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி காஷ்மீரின் சோபியன் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட மூன்று பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேஜர் முகுந்த் மற்றும் அவரது குழுவினர் அந்த பகுதிக்குள் புகுந்தனர். அந்த மூன்று பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்ற முகுந்த், அங்கிருந்து அப்பாவி பொதுமக்களை அங்கிருந்து மீட்டனர். ஆனால், அந்த தடுப்பு நடவடிக்கையின்போது மேஜர் முகுந்த் படுகாயம் அடைந்து, அடுத்த நாளே உயிரிழந்தார்.  

மேஜர் முகுந்தின் இத்தகைய வீரதீர செயல்களை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், ராணுவ வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும் அமரன் திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. எனவே அவை குறித்து மேலும் அறிந்துகொள்ள திரைப்படத்தை திரையரங்குகளில் மறக்காமல் பாருங்கள். அது ஒருபுறம் இருக்க, மேஜர் முகுந்த் பணியாற்றிய ராஷ்டிரிய ரைபில்ஸ் படைப்பிரிவு குறித்து தெரிந்துகொள்ள இதை தொடர்ந்து வாசியுங்கள்...

ராஷ்டிரிய ரைபிள்ஸ் எதற்கு?

ராஷ்டிரிய ரைபிள்ஸ் என்பது பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க உருவாக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் (Indian Army) சிறப்பு படை எனலாம். இதுவும் பாதுகாப்புத்துறையின் கீழ் இருக்கும். ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஜம்மு காஷ்மீரில் எழும் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்க  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir) பிராந்திரயத்தில் அமைதியை நிலைநாட்டுவதும், ஸ்திரத்தன்மையை பேணுவதும்தான் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் முதன்மையான நோக்கமாகும். அதிலும் குறிப்பாக, அங்கு இயல்புநிலையை மீட்டெடுத்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உதவுவதாகும்.  

மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் தெரியுமா?

முன்னர் கூறியது போன்று இந்திய இராணுவத்தின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் இயங்குகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட பிற பாதுகாப்புப் படைப்பிரிவுகளுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஆர்ஆர் செயல்படும். இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் இடம்பெறுவார்கள். தன்னார்வம் கொண்டும் இந்த படையில் அதிகாரிகளும், வீரர்களும் சேவையாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர்: பயிற்சியும்... பணிகளும்... 

ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் வீரர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு, பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், உளவுத்துறை தகவல் சேகரிப்பு, மனிதாபிமான உதவி உள்ளிட்ட பலவிதமான செயல்பாடுகளை ராஷ்டிரிய ரைபிஸ் மேற்கொள்கிறது. 

கொரில்லா போர்முறை, காடு சார்ந்த போர்முறை மற்றும் நகர்ப்புற போர்முறை உள்ளிட்ட சிறப்பு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை சார்ந்த தந்திரங்களில் இந்த படை வீரர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவுகள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று, கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கை பலவீனப்படுத்துவார்கள்.

அமைதிக்கு முக்கிய பங்காற்றும் ராஷ்டிரிய ரைபிள்ஸ்

ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பல முக்கிய பயங்கரவாத அமைப்புகளை முடக்கியதில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் வெற்றி கண்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி தொழிற்பயிற்சி, உள்ளூர் மக்களுக்கு கல்வி பயிற்றுவிப்பது, மருத்துவ முகாம்களை மேற்கொள்வது என மக்கள் நலன் சார்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவினர் ஈடுபடுவார்கள். 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது. அந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் இதேபோன்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின்போதுதான் மேஜர் முகுந்த் வரதராஜன் உயர்தியாகம் செய்தார் என்பது மீண்டும் நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | மேஜர் முகுந்த் மகளுடன் விஜய் ! வைரலாகும் போட்டோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News