Latest News Shariq Haasan Marriage : தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர், ரியாஸ் கான். கேரளாவில் பிறந்த இவர், சென்னையில் பள்ளி படிப்பை முடித்து, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர். இவர், சக நடிகையான உமாவை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் உள்பட இன்னொரு மகனும் இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரியாஸ் கானின் மகன்:


வில்லன் நடிகரான ரியாஸ் கான் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறர். குறிப்பாக இவர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்த பத்ரி, பாபா, ரமனா, வின்னர், கஜினி, திருப்பதி உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்திருக்கின்ரான. கடந்த ஆண்டு இரண்டு ஆண்டுகளில் வெளியான பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்கலில் கூட சோமன் சம்பவன் எனும் பாத்திரத்தில் நடித்திருந்தார். 


1992ஆம் ஆண்டு இவரும் சினிமா துணை நடிகையான உமாவும் திருமணம் செய்து கொண்டனர். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் என்ற மகன் இருக்கிறார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். இதில், 49 நாட்களிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து ஓரளவிற்கு பிரபலமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. 


நடித்த படங்கள்:


நடிகர் ஷாரிக் ஹாசனும், தனது தந்தையை போலவே திரையுலகிற்குள் நுழைந்ததும் வில்லன் நடிகராக அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் படத்தில் நிதின் எனும் கதாப்பாத்திரத்ஹில் நடித்திருந்தார். இதையடுத்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்திருந்த இவர், டான் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்து இவர் நடித்திருக்கும் ரெசார்ட் என்ற படம் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | Actor Silambarasan : சிம்புவிற்கு விரைவில் திருமணம்! பெரிய நடிகரின் மகள்தான் மணப்பெண்..


விரைவில் திருமணம்! 


சிறுவயதில் பலர் பார்த்து மகிழ்ந்த நடிகர்களுக்கு திருமணம் முடிந்ததை தொடர்ந்து, அவர்களின் வாரிசுகளுக்கும் தொடர்ந்து திருமணம் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் தடபுடலாக திருமணம் நடைப்பெற்றது. அதே போல சரத்குமாரின் மகள் வரலக்ஷமிக்கும் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. 



மணப்பெண் யார்?


ஷாரிக் ஹாசனின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அவரது தரப்பில் இருந்தோ அவரது தாய் வெளியிட்டிருக்கிறார். தனது மகனுக்கு மரியா ஜெனிஃபர் எனும் பெண்ணுடன் திருமணம் ஆக உள்ளதாக அவர் அதில் கூறியிருக்கிறார்.



இவர் தனது காதலியுடன் போட்டிருக்கும் பழைய போஸ்டுகளும் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவர் நடிகையா என்ற கேள்வியும் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ