Latest News Siddharth Aditi Rao Hydari Wedding : இந்திய திரையுலகில் பெரிய நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்களாக இருக்கின்றனர், சித்தார்த்-அதிதி ராவ். இவர்கள், சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்தார்த்-அதிதி ராவ்:


இந்திய திரையுலகில், முக்கிய நடிகராக விளங்கி வருபவர் சித்தார்த். இவரும், பிரபல நடிகை அதிதி ராவ் ஹைத்ரியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஆண்டின் மார்ச் மாதம், இவர்கள் ஒரு கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து அவர்கள் இருவரும் பெரிதாக எங்கும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், இவர்கள் அனைத்து பட விழாக்களுக்கும் ஒன்றாக சென்று வருகின்றனர். 


சித்தார்த்தும், அதிதி ராவ்வும் கடந்த 2021ம் ஆண்டு ‘மகாசமுத்திரம்’ படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் தான் இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 


அதிதி ராவ்வின் வீட்டில் நிச்சயதார்த்தம்..


அதிதி ராவ்விற்கு, சில நாட்களுக்கு முன்பு ப்ரப்போஸ் செய்தார் சித்தார்த். அது எந்த இடம் தெரியுமா? அதிதி ராவ், சிறுவயதில் தனது பாட்டியுடன் அவரது வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். அவரது சிறுவயதில் அவருக்கு ஸ்பெஷலாக அமைந்த வீட்டிலேயே அவரை மகிழ்ச்சிப்படுத்த நினைத்த சித்தார்த், அந்த வீட்டில்தான் அதிதியிடம் “என்னை திருமணம் செய்து கொள்கிறாரா?” என்று கேட்டிருக்கிறார். இந்த நிகழ்விற்கு பிறகு இருவரும் தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் மாேதிரம் மாற்றிக்கொண்டதாகவும், இதில் வெகு சிலரே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்


எங்கு திருமணம்? 


நடிகை அதிதி ராவ்வின் குடும்பத்தினர் பற்றி இங்குபலருக்கு தெரியாது. உண்மையில், அதிதி ராவ் ஐதராபாத்தில் இருந்த பிரபு குடும்பத்தை சேர்ந்தவராம். வனர்பதி ராஜ வம்சம், இவர்களின் வம்சம் என சொல்லப்படுகிறது. அதிதி ராவ்வின் மாமா, ஐதராபாத்தின் முதல்வராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிதியின் முன்னோர்களால் கட்டப்பட்ட, 400 ஆண்டுகள் பழைமையான ‘வனர்பதி’ கோயிலில் திருமணம் நடக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இருவருக்கும் பிரம்மாண்மான முறையில் திருமணம் நடக்கம் என கூறப்படுகிறது. 


இருவருக்குமே இரண்டாவது திருமணம்..


நடிகை அதிதி ராவ்விற்கு தற்போது 37 வயதாகிறது. சித்தார்த்திற்கு, 45 வயதாகிறது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் ஆகும். அதிதி ராவ், முதன் முதலில் சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வெறும் 21 வயதுதான். அப்போது அவர் திரையுலகிற்குள் நுழைந்து இருந்தாலும், பெற்றோர்கள் அவர்களாகவே பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம், 2013ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.


அதே போல, மிக இளம் வயதிலேயே மேக்னா என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2006ஆம் ஆண்டிலேயே பிரிந்த இவர்கள், 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இடையில் இருவரும் வெவ்வேறு நபர்களை டேட்டிங் செய்தாலும் கடைசியில் ஒருவரை ஒருவர் எப்படியோ கண்டுகொண்டு, இப்போது இல்வாழ்க்கைக்குள் இணைய இருக்கின்றனர். 


மேலும் படிக்க | நம்ம அதிதி ராவா இது? ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு முகம் எப்படியிருக்கு பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ