அமரன் வசூல் விவரம்: அட்ரா சக்க! 6 நாட்களில் இத்தனை கோடியா?
Amaran Box Office Collection Day 6 : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் அமரன் திரைப்படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Amaran Box Office Collection Day 6 : தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான அமரன் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் வசூல் விவரம் மற்றும் வெற்றி விழாவில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அமரன் திரைப்படம்:
2014 ஆம் ஆண்டு மக்களை காப்பாற்ற தன் உயிரை நீத்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் அமரன். 31 வயதில் உயிரிழந்த இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரது கதாபாத்திரத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் சுமார் 120 கோடி அளவில் உருவானதாக கூறப்படுகிறது. வெளியான முதல் நாளே இப்ப படம் சுமார் 42 கோடியை உலக அளவில் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது.
3 நாட்களில் 100 கோடி:
வழக்கமாக தமிழ் திரையுலகில் வெளியாகும் படங்களில் விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்கும் படங்கள்தான் அதிவேகமாக ரூ.100 கோடியை வசூல் செய்யும். ஆனால், இந்த முறை சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படம், வெளியான 3 நாட்களில் அதிவேகமாக 100 கோடியில் கலெக்ட் செய்து இருக்கிறது
இதையடுத்து சமீபத்தில், அமரன் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவின் அனைவரும் கலந்து கொண்டனர். மேஜர் முகுந்த் குறிப்பிட்ட உயர் சாதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஆனால் படத்தில் அதற்கான குறியீடுகள் எதுவுமில்லை. இதற்கு விளக்கம் அளித்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, முகுந்த் எப்போதும் தன்னை ஒரு இந்தியனாகவும் தமிழனாகவும் மட்டுமே காட்டிக்கொள்ள விரும்பியதாகவும், அதனால் படத்தில் எந்த குறியீடு இருக்க வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து குறியீடு இல்லாததை பெரும் சர்ச்சைக்கு வந்தவர்கள் சைலன்டாகினர்.
மேலும் படிக்க | இந்து ரெபேக்கா வர்கீஸிடம் மறுமணம் குறித்து பேசிய மாமனார்..அவர் சொன்ன பதில் என்ன?
6ஆம் நாள் வசூல்:
அமரன் திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்டது. அதன்படி இப்படம் இப்போது வரை சுமார் ரூ. 163 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அமரன் படத்தின் வெற்றிக்கு காரணம்!
அமரன் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவம் என்பது படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, இந்த கதை முகுந்தன் மனைவி இந்துவின் இடத்தில் இருந்து எழுதப்பட்டது போல இருந்தது. இதனால் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பலர் அழுது கொண்டே வந்தனர். இதயத்தை கணக்க வைத்த படமாக இருந்தாலும் பலர் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காதல் காட்சிகளுக்காகவும், ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் மீண்டும் மீண்டும் திரையரங்கில் இப்படத்தை பார்த்தனர்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும் நல்ல வரவைப்பை பெற்றிருக்கின்றன. இதுவும் படத்திற்கு பெரும்பாலமாக அமைந்தது. திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகள் நகரும் முறை நெருடலாக இருந்தாலும், எமோஷனல் காட்சிகள் வலுவாக இருப்பதால் படம் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ