Indhu Rebecca Varghese Second Marriage : தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம், இப்போது பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தை உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுத்து இருக்கின்றனர்.
அமரன் திரைப்படம்:
2014 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் நாட்டையே உலுக்கிய சம்பவம் ஆகும். இந்த தாக்குதலின் போது மக்களின் உயிரை காத்து தன் உயிரை நீத்தவர் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவர் உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆகியிருப்பதை தொடர்ந்து இவர் குறித்த பயோகிராஃபியை, அமரன் படமாக எடுத்தனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேசனல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக மேஜர் முகுந்த வரதராஜன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு மனைவியாக சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், தீபாவளியை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் கொடுத்துள்ளனர். முதல் நாளில், சுமார் ரூ.42 கோடி வசூலை இப்படம் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
மனைவியின் கண் வழியே கதை…
அமரன் திரைப்படம், இந்து ரெபேக்கா வர்கீஸின் கண் வழியே மேஜர் முகுந்தை பார்ப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் காதலில் ஆரம்பித்து, க்ளைமேக்ஸில் முகுந்த் இறந்து போவது வரை அனைத்தையும் இந்துவின் இடத்தில் இருந்து பார்க்கின்றனர், ரசிகர்கள். இறுதிக்காட்சி, ரியாலிட்டிக்கி மிக நெருக்கமாக இருப்பதால் பலர், கணத்த மனதுடன் தியேட்டரை விட்டு வெளியில் வருகின்றனர்.
மறுமணம்..
மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்து போன போது, அவருக்கு வயது 31. அவரது மனைவிக்கும் அதே வயதுதான். இவர்களுக்கு அர்ஷியா என்ற ஒரு குழந்தையும் இருக்கிறது. முகுந்த் இறந்த பின்பு, அவரது தந்தை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அப்போது, தன் மருமகளுக்கு 31 வயதுதான் ஆகிறது இதனால், அவரது தந்தையிடம் சென்று மறுமணம் குறித்து பேசியதாக கூறியிருக்கிறார், முகுந்தின் தந்தை வரதராஜன். இதையடுத்து, தன்னிடம் வந்து பேசிய இந்து, “நான் மறுமணம் செய்து கொள்வேன் என நினைத்தீர்களா அப்பா?” என்று தன்னிடம் வந்து கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நான் சொன்னேன் 31 வயசுதான் ஆகுது இன்னொரு கல்யானம் பண்ணிக்கோமானு
அப்பா நான் பண்ணிப்பேன்னு நினைக்கறிங்களாHuge respect
This is true love which is a absolute rarity these days #Amaran#KamalHaasan#SaiPallavipic.twitter.com/MFbgh7rczA
— Nammavar (@nammavar11) November 1, 2024
தீராக்காதல்!
அமரன் படத்தை பார்த்தவர்களுக்கு, ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. இப்படம், ஒரு காதல் கதை என்பதுதான் அந்த புரிதல். ஒரு ராணுவ வீரனுக்கு அவனது நாட்டின் மீது அல்லது, வேலையின் மீது இருந்த தீராக்காதலையும், ஒரு மனைவிக்கு தனது கணவனின் மீதிருந்த தீராக்காதலையும் காண்பிக்கும் கதையாக இருக்கிறது, அமரன். பலர், இப்படத்தை கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
மேலும் படிக்க | அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ