பிக்பாஸ் 8 சாச்சனா குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார்?
Actor Sivakarthikeyan In Bigg Boss 8 Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அமரன் படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டார். அப்போது, அவர் போட்டியாளர் சாச்சனா குறித்த அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
Actor Sivakarthikeyan In Bigg Boss 8 Tamil : தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். கடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 8வது சீசன் முதல் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை கையாண்டு வருகிறார். இதில், நேற்றைய எபிசோடில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் 8:
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, இந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதியின் நேர்பட பேசும் திறனும், அவர் போட்டியாளர்களை பாசிடிவாக பிபி இல்லத்திற்குள் அனுப்பியதும் பலருக்கு பிடித்து போயிருந்தது. இதையடுத்து, இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், வார இறுதியிலும் தன்னை நோக்கி வரும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் எபிசோடுகள் வருவது வழக்கம். நேற்றைய எபிசோடும் அப்படி ஒன்றாகவே அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சியிலேயே தாெகுப்பாளராக இருந்து, இப்போது டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது அமரன் திரைப்படம், வரும் அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.
சாச்சனா குறித்து பேசிய விஷயம்!
பிக்பாஸ் இளம் போட்டியாளராகவும், முக்கிய போட்டியாளராகவும் இருக்கிறார் சாச்சனா நமிதாஸ். இவர், மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமானவர். அதற்கு முன்னர் ஆகஸ்ட் 16 1947 படத்திலும் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் குறித்து சிவகார்த்திகேயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சாச்சனாவும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார். ஒரு காட்சியில் அவரை மடியில் அமர வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சியில் நடிக்க வேண்டி வந்ததாகவும், அப்போது “பாப்பா இது உனக்கு Comfortable-ஆ இருக்கா? ஏதேனும் பிரச்சனையா?” என்று விசாரித்திருக்கிறார் சிவா. அப்போது சாச்சனாவும், “அதெல்லாம் ஒன்றுமில்லை, எல்லம் Okதான்” என்று கூறியிருக்கிறார். பின்னர் “என்ன பாப்பா படிக்கிற?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு சாச்சனா தான் கல்லூரி படிப்பையே முடித்து விட்டு, வேலைக்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார். இதைக்கேட்டு தான் ஒரு நிமிடம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானதாக பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
“இவர் ஏதோ 10வது படிப்பார் என்று நினைத்தேன்..வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பெண் என எதிர்பார்க்கவில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறினார், சிவகார்த்திகேயன்.
அமரன் திரைப்படம் குறித்து பேச்சு..
நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்திருக்கும அமரன் படம் குறித்தும் பேசினார். இது, மேஜர் முகுந்திற்கும் அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஸிற்கும் இடையேயான கதை என்று கூறியிருக்கும் அவர், இந்த படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அறிவித்ததாகவும் பேசியிருந்தார்.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்னேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: நடிகை சாச்சனா நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ