Actor SJ Suryah Salary In Raayan: தற்போது எந்த படமாக இருந்தாலும் சரி அதில் எஸ் ஜே சூர்யா கட்டாயம் இடம்பெற்று வருகிறார், அப்படி கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது ‘ராயன்’ படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ் ஜே சூர்யா வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு என்கிற தகவலை இந்த கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயன் திரைப்படம்:
தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ராயன் திரைப்படம், இவரது 50வது படமாகும். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதனுடன் கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த படம் நேற்று உலகமெங்கும் இருக்கும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தை உங்கள் ஜீ தமிழில் பார்க்கலாம்! எப்போது தெரியுமா?


ராயன் விமர்சனம்:
இதனிடையே ராயன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது, கேங்க்ஸ்டர் டிராமா என்பதால் பெரிதும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், படத்தின் முதல் பாதி பயங்கரமாக இருப்பதாகவும், அடுத்த பாதி கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ஒரு சிலர் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.




ராயன் முதல் நாள் வசூல்:
மொத்தம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படம் முதல் நாளிலேயே 12.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று நாளை சனி - ஞாயிறு என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


எஸ் ஜே சூர்யாவின் சம்பளம்:
இதனிடையே ராயன் படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு சம்பளமாக எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம். அதன்படி ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவுக்கு 8 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ