மருத்துவமனையில் படுத்திருக்கும் நடிகர் சூர்யா! என்னாச்சு?
வரும் 23ஆம் தேதி தனது பிறந்தநாள் வரவிருப்பதை ஒட்டி, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.
ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.
கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில் இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.நடிகர் சூர்யாவின் மனிதம் போற்றும் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
மேலும் படிக்க | Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
அம்பானி வீட்டு திருமண விழாவில் சூர்யா:
நடிகர் சூர்யா, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார். அங்கு, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருக்கும் அவர், சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமண விழா நடைப்பெற்றது. இதில் தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்ட அவர், வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார். இவருக்கு ஏற்றது போல, ஜோதிகாவும் அழகாக புடவை கட்டியிருந்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் இவர்களின் காதலை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.
கங்குவாவில் பிசி!
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம், கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சையின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தை கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வருகிறது. சூரரை போற்று படத்தின் இந்தி ரீ-மேக்கான சர்ஃபிரா படத்தில் சூர்யா காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கங்குவா பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் சூர்யா, அடுத்து ஒரு பாலிவுட் படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அத்துடன் சேர்த்து, அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்த புறநானூறு திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Suriya 44 : சூர்யாவிற்கு வில்லனாகும் இளம் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ