‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..
Actor Vishal Salary For Rathnam Movie : விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரத்னம் திரைப்படத்தை, ஹரி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Actor Vishal Salary For Rathnam Movie : தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ள நடிகர்களுள் ஒருவர், விஷால். இவர், 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருகிறார். பல கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்திருக்கும் விஷால், கடந்த சில வருடங்களாக மார்கெட்டில் ஸ்தம்பித்து போயுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம், ரத்னம். இந்த படத்திற்காக அவர் மொத்தமாக பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரத்னம் திரைப்படம்:
ரத்னம் திரைப்படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. சாமி, சிங்கம், ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆக்ஷன் த்ரில்லர் படங்களை இயக்கியிருந்த ஹரி, சில வருடங்கள் கழித்து மீண்டும் ‘ரத்னம்’ படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு வெளியான ‘பூஜை’ படத்திற்கு பிறகு, 10 வருடங்கள் கழித்து ஹரியும் விஷாலும் கைக்கோர்த்திருக்கின்றனர். இந்த படம், இவர்கள் இருவருக்குமே முக்கியமான படமாக இருக்கிறது.
ரத்னம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். சமுத்திரகனி வில்லனாகவும், யோகி பாபு காமெடி நாயகனாகவும் நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் சில நிமிடங்களுக்கு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
விஷால் வாங்கிய சம்பளம்..
நடிகர் விஷால், நன்கு சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். ரத்னம் படத்திற்காக, இவர் மொத்தம் ரூ.8 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதில் 5.4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஷால், கடைசியாக நடித்திருந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி கலெக்ட் செய்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் அப்படத்தில் நடிக்க ரூ.7 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டது. இதனால் அதற்கடுத்து அவர் நடித்த ‘ரத்னம்’ படத்திற்காக ரூ.1 கோடி உயர்த்திய அவர், கடைசியில் ரூ.5.4 கோடி ரூபாய்தான் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..
ரத்னம் படத்திற்கு கிடைத்த விமர்சனம்:
தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தது முதல், இப்போது வரை, தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் ஒரே ஹீரோ ‘இவர்’தான் என்ற பெயரை பெற்றவர் நடிகர் விஷால். செல்லமே படத்தில் இருந்து, தற்போது நடித்திருக்கும் ரத்னம் படம் வரை இவர் நடிக்கும் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் இருக்காது. ஒரு சில படங்களில், இந்த ஆக்ஷன் காட்சிகள் மிகையாக காண்பிக்கப்படுவதும், அதற்கு பிறகு ரசிகர்கள் விஷாலை விமர்சிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. ரத்னம் படத்திலும் இதே கதைதான். இந்த படத்தின் முதல் பாதி சுமாருக்கும் மேல் ரகமாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி படுமோசமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகியிருக்கிறது.
சேசிங் காட்சிகள் மற்றும் சில சண்டை காட்சிகளை தவிர, படத்தில் வேறு எதுவும் தேறாது என்றும் ரசிகர்கள் விமர்சித்திருக்கின்றனர். யோகி பாபுவின் காமெடி, படங்களில் உள்ள எமோஷனல் காட்சிகள், திணிக்கப்பட்ட ரொமான்ஸ் என அனைத்துமே ரசிகர்களால் வசைபாடப்பட்டு வருகின்றன. சினிமா விமர்சகர்களும், ரத்னம் படம் சுமார்தான் என கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள மலையாள திரைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ