)
Rathnam Movie Twitter Review : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் விஷால். இவர், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ படம் மூலம் கைக்காேர்த்திருக்கிறார். பூஜை படத்திற்கு பிறகு ஒன்றாக விஷாலுடன் பணிபுரியும் ஹரிக்கு, ரத்னம் படத்தின் ரிலீஸ் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
ரத்னம் திரைப்படம்:
இயக்குநர் ஹரிக்கே உரிய ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம், ரத்னம். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்திருக்கின்றன. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு விஷாலும் இயகுநர் ஹரியும் ரத்னம் படம் மூலம் மீண்டும் கைக்கோர்த்திருக்கின்றனர்.
கதையின் கரு..
ஒரு இளம் பெண்ணை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆக்ஷன் ஹீரோவின் கதையும், அந்த பெண் ஆபத்தில் இருப்பதற்கான காரணமும்தான் படத்தின் கரு.
ரசிகர்களின் விமர்சனம்..
ரத்னம் திரைப்படத்தில், பழைய விஷாலை பார்க்க முடிந்ததாக ஒரு ரசிகர், தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
First Half Done #Rathnam
April 26, 2024
Hari Mamsu Sambhavam Palaya @VishalKOfficial Paaka Mudinjadhu @priya_Bshankar Andha Bgm Oda Entry Semaya Irundhadhu Comedy Works At Many Parts Second Half Um Ippadi Irundha Podhum https://t.co/tsXHHSgRPq pic.twitter.com/9SQYyX9h3Q
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் பாதி வரை பார்த்து முடித்துள்ள அந்த ரசிகர், இயக்குநர் ஹரி சம்பவம் செய்துள்ளதாகவும், காமெடி வர்க் அவுட் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார்தான்..
ரத்னம் படத்தின் முதல் பாதியை பார்த்த ஒருவர், படம் சுமாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
#Rathnam First Half over...
— April 26, 2024
Average...
Waiting second Half.... pic.twitter.com/pTgwvojfa4
இன்னும் சிலர், படத்தில் வழக்கமான இயக்குநர் ஹரியின் ஆக்ஷன் காட்சிகள் மாஸாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆக்ஷன் ஆக்ஷன் ஆக்ஷன்..
ஆக்ஷன் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு ரத்னம் படம் மிகவும் பிடித்திருக்கிறது.
#Rathnam Action Action Action First Half Done
— (@KarmAvoXGobi) April 26, 2024
..@VishalKOfficial pic.twitter.com/1fIDulTSLM
ஒரு ரசிகர், படம் ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பி இருப்பதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியிருக்கிறார்.
படம் கொஞ்சம் சுமார்..மேக்கிங் சூப்பர்..
படத்தின் முதல் பாதி வரை பார்த்த ஒரு ரசிகர், தனது ட்விட்டர் தளத்தில் அது குறித்த விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார்.
#Rathnam 1st Half Review:- first 30 mins Screenplay was dull & some lag scenes & wanted ah love scenes nu paartha adhulayum oru emotion connect , single shot was making vera level Pre Interval Scenes Well connected with emotions!Hari Mam's padam ini tha start pola
—April 26, 2024
அதில், “முதல் 30 நிமிட திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதாகவும், ஒரு சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காதல் காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதாகவும் மேக்கிங் நன்றாக வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் மாஸாக இருப்பதாகவும், ஹரியின் திரைப்படம் இனிதான் ஆரம்பிக்கும் என்றும் அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் ரசிகர்கள் பலர், ரத்னம் படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் தேறும் எனவும், விஷால் பல இடங்களில் டைலாக் பேச கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது பாதி முடிந்தவுடன் படம் குறித்த முழு விமர்சனம் தெரிய வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ