Keerthy Suresh Rumored To Be Get Married Soon : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்கி வருபவர், கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், இப்போது டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீர்த்தி சுரேஷ்:


முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் அன்பு மகள், கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருமிவர், சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகியாக வலம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். 


கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழில்தான் முதலில் பட வாய்ப்பு கிட்டியது. இதையடுத்து இவரை பிரபலமாக்கி விட்டது, ரஜினி முருகன் படத்தில் இடம் பெற்றிருந்த‘உன் மேல ஒரு கன்னு’ பாடல். தாெடர்து சூர்யா, விஜய், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது மகாநதி திரைப்படம். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. 


திருமணமா? 


எந்த நடிகை சிங்கிளாக இருந்தாலும், அவ்வப்போது அவர்களின் காதல் அல்லது திருமணம் குறித்து வதந்திகள் பரவுவது வழக்கம். அப்படி, கீர்த்தி சுரேஷ் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, கீர்த்திக்கு தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, இவருக்கும் ஒரு அரசியல் பிரபலத்தின் மகனுக்கும் திருமணம் என பேசப்பட்டது. இந்த தகவல்களை அவரது தந்தை சுரேஷ், முற்றிலுமாக ஊடகத்தினரிடம் மறுத்தார். இப்போது, மீண்டும் அதே போன்ற ஒரு தகவல் பரவி வருகிறது. 


இசையமைப்பாளருடன் காதல்? 


32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷும், இந்திய அளவில் வெற்றிகர இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும், ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக வேலை பார்த்து இருக்கின்றனர். அது மட்டுமன்றி, இருவருக்குள்ளும் நல்ல நட்பும் இருந்து வருகிறது. ஜவான் படம் வெளியான சமயத்தில், இவர்கள் இருவரும் இருக்கும் பழைய போட்டோக்களை வைத்து வட இந்திய ஊடகங்கள் பல, இவர்களுக்குள் காதல் உறவு இருப்பதாக எழுதின. ஆனால், இது குறித்து கீர்த்தி-அனிருத் இருவருமே எந்த பதிவையும் வெளியிடவில்லை. 



மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, கீர்த்திக்கும் அனிருத்திற்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் வதந்தியா, அல்லது உண்மை தகவலா என்பதை இனிவரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம். 


அனிருத்தின் காதல்..


இளம் இசையமைப்பாளரான அனிருத் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இன்னும் இவர் இசையில் வெளியாக திரைப்படங்கள் காத்துக்கிடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் இவர், பிரபல தாெழில் அதிபர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கீர்த்திக்கும் இவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அனிருத், அடுத்து ரஜினிகாந்தின் கூலி, அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் தளபதி 69 உள்பட பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 


மேலும் படிக்க | தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் அந்த நடிகை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ