Radhika Sarathkumar Alleges Hidden Camera on Caravan : ஹேமா கமிஷன்: மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக நடிகைகள் தரப்பில் இருந்து பாலியல் அச்சுறுதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைத்து குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன. இயக்குநர்கள் வினீத், ரஞித் பாலகிரிஷ்ணன், விகே பிரகாஷ் மற்றும் பிரபல நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேலா பாபு உள்ளிட்ட பலர் இந்த பாலியல் புகார்களில் சிக்கியிருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவத்தை அடுத்து, மலையாள திரைப்பட சங்க தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் பதவி விலகினர். குறிப்பாக, மலையாள நடிகர் மோகன்லால் தனது பொறுப்பில் இருந்து விலகியது பலருக்கு அதிர்ச்சியளித்தது. நடிகைகள் பார்வதி திருவோது, சமந்தா, விசித்ரா உள்ளிட்ட பலர், தொடர்ந்து எழும் பாலியல் புகார்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தமிழ் நடிகை ராதிகாவும், தனக்கு நேர்ந்த ஒரு சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். 


கேரவனில் ரகசிய கேமரா..


நடிகையும், அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் சமூக பிரச்சனைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அவரும் பேசியிருக்கிறார். 


“நான் மலையாள படம் ஒன்றில் நடித்த போது, ஷூட்டிங்கிள் அமர்ந்திருந்த சிலர் போனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர். இது குறித்து விசாரித்த போது, அவர்கள், நடிகைகளின் கேரவனில் ரகசிய கேராக்களை பொறுத்தி, அவர்கள் உடைமாற்றும் வீடியோக்களை பதிவு செய்து பார்க்கின்றனர் என்பது தெரிய வந்தது” என்று கூறினார்.


மேலும், அதன் பிறகு தனக்கு கேரவனில் உடை மாற்ற பயமாக இருந்ததாகவும், இதனால் ஓட்டலுக்கு சென்று உடை மாற்றியதாகவும் கூறினார். மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..என்ன சொன்னார் தெரியுமா?



சினிமாவில் தொடரும் பாலியல் சீண்டல்கள்..


சினிமா துறைக்கு வாய்ப்பு தேடி, நடிக்க வரும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாகவும் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’களுக்கு அழைக்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. தமிழ் திரையுலகிலும் கூட இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கின்றன. முதன்முறையாக மலையாள திரையுலகில்தான் இந்த பிரச்சனையை பெரிதாக எடுத்து, தனியாக நீதிபதிகள் குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயசூர்யா, மணியன்பில்லா ராஜு ஆகியோர் மீது பாலியல் புகார்கள் பாய்ந்தது. வில்லன் நடிகர் ரியாஸ் கான் மீதும், ஒரு இளம் நடிகை புகாரை தெரிவித்தார். இந்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியவர்கள், விரைவில் தண்டனையை அனுபவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தெலுங்கு சினிமா குறித்து பேசிய சமந்தா..


கேரளாவை போல, தெலங்கானாவிலும் தெலுங்கு சினிமாவில் தொடரும் பாலியல் தொல்லைகளை தடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார். பல நடிகைகள் இது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், ஒரு சில நடிகைகள் இது குறித்து பேசுவது பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது.


மேலும் படிக்க | AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ