மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி.. வெளியானது அப்டேட்

Malaikottai Vaaliban OTT Release Date: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2024, 10:11 AM IST
  • பிரஷாந்த் பிள்ளை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
  • வரும் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும்.
  • மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி ரிலீஸ் தேதி.
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி.. வெளியானது அப்டேட் title=

Malaikottai Vaaliban OTT Release Date: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் வரும் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலைக்கோட்டை வாலிபன் :
ஜல்லிக்கட்டு, சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் (Mohanlal) நடித்திருக்கும் மலைக்கோட்டை வாலிபன். ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து  இப்படத்தை தயாரித்துள்ளனர். ஹரீஷ் பரேடி, தானிஷ் சைத், சோனாலி குல்கரனி, கதா நந்தி உள்ளிட்டவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஷாந்த் பிள்ளை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க | Lady Superstar Nayanthara: மகாராணி போல் ஜொலிக்கும் நயன்தாரா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

வரலாற்றுப் படமான (Malaikottai Vaalibanஇந்த திரைப்படத்தில் மோகன்லால், மலைக்கோட்டை வாலிபனாக நடித்துள்ளார். ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார். மேலும், ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆர். ஆச்சாரி மற்றும் மனோஜ் மோசஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மிக நுட்பமாக நம்மை ஒரு பழமையான கதையில் இருப்பதை காட்சிக்கு காட்சி உணரவைத்துள்ளார்.

மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி ரிலீஸ் தேதி: 
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மோகன்லாலின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளம் வெளியிட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க | Trisha: ‘அருவருப்பா இருக்கு..’ கூவத்தூர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! ட்வீட் இதோ.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News