Latest News Actress Item Song In Pushpa 2 The Rule  : பிரபல தென்னிந்திய நடிகர் அல்லு அரஜுன், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம்தான், புஷ்பா 2. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புஷ்பா: தி ரூல்


தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ஆக்‌ஷன் டிராமா படம், புஷ்பா தி ரூல். 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா:தி ரைஸ் படத்டிஹ்ன் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து, சுமார் 400-500 கோடி செலவாகியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார்.


மலையாள நடிகர் பகத் பாசில் புஷ்பா 2 படத்தில் ஹீரோவாக நடித்திருக்க ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அனுசுய பரத்வாஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். புஷ்பா படத்தின் முதல் பாகம், சந்தன மரக்கடத்தலில் ஹீரோவின் வளர்ச்சியை காண்பிக்க, இரண்டாம் பாகம், அவன் எப்படி அந்த சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைக்கிறான் என்பதை காட்ட இருக்கிறது. இப்படம், வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடனமாடும் நடிகை..


புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரிதளவில் பிரபலமாக முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருந்தது, அப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் “ஊ அண்டாவா”. இந்த பாடலில், முதன் முறையாக கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல், பட்டித்தொட்டியெங்கும் ஹிட் ஆக, அதுவே படத்திற்கு பெரிய ப்ரமோஷனாக அமைந்தது. 


இதே பாேல, இப்போது புஷ்பா 2 படத்திலும் பிரபல நடிகை ஒருவர் நடனமாட இருக்கிறார். ஆனால், அது சமந்தா இல்லை. வேறு யார் தெரியுமா? 


23 வயது பிரபல நடிகை..


தற்போது தென்னிந்திய திரையுலகில் மிகப்பிரபலமான நடிகையாக வலம் வருபவர், ஸ்ரீலீலா. மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்த அவர், ‘மடத்தப்பட்டி’ பாடலில் குத்து டான்ஸ் ஆடியிருந்தார். இவர் ஆடிய நடனத்தை பலரும் ரீல்ஸ் மூலம் ரீ-கிரியேட் செய்து பதிவிட ஆரம்பித்தனர். இதனால் இவர் இந்திய அளவில் பிரபலமானார். அடுத்தடுத்து, இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த நிலையில்தான், இவர் தற்போது புஷ்பா 2 படத்தில ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 



தமிழ் படத்தில் நடிக்கிறாரா? 


நடிகை ஸ்ரீலீலா, இன்னும் தமிழ் மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது இவரது ரசிகர்களின் பெரும் குறையாக இருந்தது. அதை தீர்த்து வைக்கும் வகையில், அவர் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இதில், இவருடன் சேர்ந்து அதர்வா அவருக்கு தம்பியாக நடிக்கிறாராம், இவருக்கு ஜோடியாகத்தான் ஸ்ரீலீலா நடிப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நெருங்கி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி! படம் எப்படி வந்துள்ளது?


மேலும் படிக்க | க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ