க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’

Allu Arjun Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தகவல் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 5, 2024, 04:28 PM IST
  • ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்.
  • அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’
  • படக்குழு தகவல் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ title=

Allu Arjun Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தகவல் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் "புஷ்பா தி ரைஸ்". செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனுடன் புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது.

மேலும் படிக்க | சத்யராஜ் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்! கலக்கலாக வெளியான பர்ஸ்ட் லுக்!

கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது 'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா தி ரூல்’ (Pushpa 2 The Rule) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதிகட்டப் பணிகளில் காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த ஜூன் 17 ஆம் தேதி படக்குழு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், இது படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் படம் டிசம்பர் 6-ம் தேதி சொன்னபடி வெளியாகும் என்பதையும் படக்குழு எக்ஸ் தளத்தில் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | “அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News