Pushpa 2 : பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..
Pushpa 2 Movie Premiere Show Stampede : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Movie Premiere Show Stampede : இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், புஷ்பா 2: தி ரூல். இந்த படத்தை, சுகுமார் இயக்க மைத்ரி மூவி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியாகியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்த நிலையில், அந்த ஆர்வமே இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கிறது.
தியேட்டரில் கூட்ட நெரிசல்!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, ஆந்திரா-தெலங்கானாக ஆகிய பகுதிகளில் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த படத்தின் முதல் ப்ரீமியர் ஷோ, நேற்று (டிசம்பர் 4) இரவு, ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நடந்தது. ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட இந்த காட்சியில், கூட்டம் அலை மோதியது. ஒரு கட்டத்திற்கு மேல், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீஸாரும் நிலையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் திணறினர். புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க, அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் பலர் வந்ததால்தான், இவ்வளவு கூட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பெண் பலி..
அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காகவும், படத்தை பார்ப்பதற்காகவும் பலர், சம்பவம் நடந்த சந்தியா தியேட்டருக்கு குடும்பமாக வந்திருக்கின்றனர். இதில், படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே கூட்டம் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. இதையடுத்து, இங்கு 39 வயதான ரேவதி என்ற பெண், தனது 2 மகன்களுடன் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்திருக்கிறார். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி, அவர் உயிரிழந்திருக்கிறார். அவரது இரு மகன்களான தேஜ் (9 வயது) சான்வி (7 வயது) ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இன்னும் பலருக்கு பலத்த அடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வைரல் வீடியோ..
தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாதிக்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் இருப்பதும், அவருக்கு CPR சிகிச்சை கொடுக்கப்படுவதும் பதிவாகியிருக்கிறது.
இந்த வீடியோ, பார்ப்பவர்களின் மனங்களை பதபதைக்க வைக்கும் நிலையில் இருக்கிறது.
கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?
புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், ஏற்கனவே பெரிய அளவில் எதிர்பார்ப்பினை தூண்டிய படமாக இருந்தது. அது மட்டுமன்றி, அதிகளவு ரசிகர்களை கொண்ட அல்லு அர்ஜுன், சாதாரண மக்கள் வந்து போகும் தியேட்டரை விசிட் செய்தது, முட்டாள்தனம் என்று சிலர் கூறி வருகின்றனர். அதே போல, தியேட்டர் நிர்வாகமோ, படக்குழு தரப்பில் இருந்தோ, இன்னும் இது குறித்து அறிக்கை அல்லது இரங்கல் எதையும் வெளியிடவில்லை.
படம் எப்படி?
புஷ்பா 2 படம் குறித்து காலையில் இருந்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதில், படம் நன்றாக இருப்பதாக பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. புஷ்பா 3 படத்திற்கான லீட்-ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் நன்றாக இருப்பதாக பலர், தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | புஷ்பா 2 ட்ரைலர்: தெறிக்கும் ஆக்ஷன் மிரட்டல்.. அல்லு அர்ஜுன் போட்ட வெடிகுண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ