Amaran Audio Launch Sivakarthikeyan About Ajith Kumar : சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம், அமரன். இந்த படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஜாேடியாக நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தின இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 18ஆம் தேதியான நேற்று மாலை நடைப்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமரன் திரைப்படம்:


நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருக்கும் அமரன் திரைப்படம், வரும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இந்த தாக்குதலின் போது, இந்திய ராணுவ வீரர் ‘மேஜர் முகுந்த்’ வீரமரணம் அடைந்தார். இவரது கதைதான் தற்போது படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. 


இப்படத்தின் டீசர் வெளியான போது மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதே போல, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான பாடல்களும் பலரது ப்ளே லிஸ்டில் இடம் பெற்று விட்டது. இதையடுத்து, நேற்று நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 


விஜய் கொடுத்த துப்பாக்கி..


தி கோட் படத்தில் கெளரவ தாேற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதில் இடம் பெற்றிருந்த “துப்பாக்கிய புடிங்க சிவா..” காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிவகார்த்திகேயன் எங்கு சென்றாலும் “துப்பாக்கி கணமா இருக்கா..” என்று பலர் கேட்க ஆரம்பித்தனர். 



இது குறித்து சிவகார்த்திகேயனிடம் நேற்று இசை வெளியீட்டு விழாவில் கேள்வி கேட்கப்பட்டது. “தளபதி கொடுத்த துப்பாக்கி பரிசு பிடித்ததா, அவர் கொடுத்த வாட்ச் பரிசு பிடித்ததா?” என்ற கேள்விக்கு அவர் “விஜய் சாரின் அன்புதான் பிடித்தது” என்று கூறினார். 


அஜித் சொன்ன பாராட்டு..!


சிவகார்த்திகேயன் நேற்றைய விழாவில், நடிகர் அஜித்குமார் குறித்தும் பேசினார். நண்பர் ஒருவரின் தீபாவளி கெட் டு கெதர் நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில், அஜித்தை சந்தித்ததாக கூறியிருந்த அவர், தன்னை பார்த்ததும் கை கொடுத்து “வெல்கம் டு ட் தி பிக் லீக் சிவா” என கூறியதாக குறிப்பிட்டார். 


அவர் ஏன் அப்படி கூறினார் என சிவகார்த்திகேயன் கேட்டதாகவும், அதற்கு அஜித், “உங்கள் வளர்ச்சியை பார்த்து சிலர் பயப்படுகின்றனர். அப்போது நீங்கள் பெரிய இடத்திற்கு வந்து விட்டதாகத்தானே அர்த்தம்..?” என்று கூறினாராம். இதை மேடையில் நேற்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சிவகார்த்திகேயன். 


ரசிகர்களுக்கு நன்றி:


நடிகர் சிவகார்த்திகேயன், தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இதை அமரன் இசை வெளியீட்டு விழாவில் நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன் 


“நான் விழும்போது கைதந்து, எழும் போது கைதட்டி, எப்போதும் என் கூடவே இருக்கும் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்” என்று ரசிகர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார்.


மேலும் படிக்க | போர் செல்லும் வீரன்.. தீபாவளிக்கு அமரன்! மிரட்டும் மேக்கிங் வீடியோ!


ரஜினி-கமல் நட்பு:


நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் நட்பு குறித்தும் நேற்றைய விழாவில் பேசினார். அப்போது, “கமல் சாருக்கு நன்றாக தெரியும், நான் பெரிய ரஜினி ரசிகன்னு. கமல் சார் தயரித்திருக்கும் இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நாளே பாத்திருவார். அதுதான், அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு. எனக்கு தெரிந்து, அபூர்வ சகோதரர்கள் என்பது இவர்கள் இருவருக்கும்தான் பொருந்தும்” என்று கூறினார். 



சாய் பல்லவி குறித்து:


சாய் பல்லவி ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது, சிவகார்த்திகேயன் அதில் தொகுப்பாளராக இருந்தாராம். இது குறித்து பேசிய அவர், “சாய் பல்லவி பிரேமம் மலர் டீச்சராக நடித்த பிறகு அவரை செல்போனில் அழைத்து பாராட்டினேன். அதற்கு அவர் என்னிடம் ‘நன்றி அண்ணா’ எனக்கூறினார்” என பழைய நினைவுகளை நேற்றைய விழாவில் பகிர்ந்தார். இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து அமரன் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க | அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ