Sivakarthikeyan Amaran Making Video: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவகார்த்திகேயன் :
நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan), ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிராமத்து கதாநாயகன் கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தி போக, அதே போன்று பல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனிடையே தற்போது கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


மேலும் படிக்க | Soori Kottukkaali Trailer: சூரிக்கு தேசிய விருது நிச்சயம்.. ’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் இதோ


சிவகார்த்திகேயனின் அமரன்:
இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அதேபோல் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராணுவ அதிகாரியாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார். 'அமரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.



முன்னதாக சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று படத்தின் டீசர் வெளியானது, மேலும் சாய் பல்லவி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது. தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


ஸ்பெஷல் மேக்கிங் வீடியோ:
இந்நிலையில் தற்போது நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலின் போது சந்திக்கும் சவால்கள், அவர்களுக்கு ஏற்படும் காயங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் 'அணு விதைத்த பூமியிலே' பாடல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | Sivakarthikeyan Viral Speech: தனுஷை சீண்டினாரா சிவகார்த்திகேயன்...? கொந்தளிக்கும் ரசிகர்கள் - என்ன நடந்தது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ