Bigg Boss 8 Tamil Host Kamal Haasan:  தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டு ஷோக்களில், மக்கள் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஒரு சில மட்டுமே. அதிலும், ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. அப்படி, விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமலும், மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் நிகழ்ச்சி:


ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் (Bigg Boss). தமிழில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி கொண்ட நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7 விருவிருப்பாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இதில், பல பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் இதில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். அதே போல் பிரதீப் ஆண்டனிக்கு (Pradeep Antony) பிக் பாஸ் 7 இல் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. 


மேலும் படிக்க | சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு


கமல் இல்லாத பிக்பாஸ்:


கடந்த ஏழு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதன்படி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



புதிய தொகுப்பாளர் இவரா?


முன்னதாக இடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு எபிசோடு நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதேபோல் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். எனவே தற்போது கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளதாக சிம்பு அவர்களே மீண்டும் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்து கூடிய விரைவில் வெளியாகலாம்.


நிகழ்ச்சி தொடங்குவது எப்போது?


கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்சி, அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தொடங்கப்பட்டு வருகிறது. கடைசியாக நடைபெற்ற 7வது சீசன், அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, ப்ரமோ ஷூட்டிங், போட்டியாளர்கள் தேர்வு அனைத்தும் தற்போது நடைபெற, இனி அக்டோபர் மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


போட்டியாளர்கள் குறித்த விவரம்?


பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, மக்கள் மத்தியில் சிறிதளவு பிரபலமான ஆனால் பரீட்சியம் ஆன முகங்களை போட்டியாளர்களாக தேர்வு செய்வர். அந்த வகையில் இதில், அமலா ஷாஜி, சோனியா அகர்வால், ரோபோ சங்கர், பூனம் பாஜ்வா, அஷ்வின் குமார், சரண்யா மோகன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம் பெறலாம் என கூறப்படுகிறது. உண்மை நிலவரம், பிக்பாஸ் குழுவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே தெரிய வரும்.


மேலும் படிக்க | புரமோஷனுக்கு அபர்ணதி பணம் கேட்டது உண்மை - ஆணித்தனமாக கூறும் இயக்குனர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ