மீண்டும் சீரியலில் அதிரடியாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் வினுஷா தேவி!

Vinusha Devi: பிக்பாஸ் கடைசி சீசனில் போட்டியாளராக பங்கேற்ற வினுஷா தேவி தற்போது பனி விழும் மலர்வணம் என்ற சீரியலில் நடிக்க உள்ளார்.

 

1 /5

'பனி விழும் மலர்வணம்' என்ற புதிய தமிழ் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் பிக்பாஸ் புகழ் நடிகை வினுஷா தேவி. இந்த தொடரில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.  

2 /5

பாக்யலட்சுமி மற்றும் சீரகடிக்க ஆசை போன்ற ஹிட் சீரியல் வரிசையில் தற்போது பனி விழும் மலர்வணம் இணையவுள்ளது.  புதிரான கதைக்களத்துடன் பார்வையாளர்களை கவர உள்ளதாக கூறப்படுகிறது.   

3 /5

பிக்பாஸ் தமிழ் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ஏற்கனவே பலரது கவனத்தை பெற்றவர் வினுஷா தேவி. சினிமா துறையில் வினுஷா தேவியின் பயணம் பலரது பாராட்டுக்களால் நிறைந்துள்ளது.  இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.   

4 /5

'பாரதி கண்ணம்மா' போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரில் தனது முகத்தை நன்கு மக்கள் மத்தியில் பதிவு செய்துள்ளார். வினுஷா தேவியின் ரசிகர்கள் இந்த புதிய சீயலுக்காக காத்துக்கொண்டுள்ளனர்.    

5 /5

பனி விழும் மலர்வனம் சீரியல் காதல் மற்றும் குடும்ப உறவுகளை அழுத்தமாக சொல்லும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த சீரியலில் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.