Actor Kothandaraman Director Shankar Dayal Dies On The Same Day : கோலிவுட் திரையுலகில், ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பிரபலங்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் சினிமா துணை நடிகர், இன்னொருவர் பிரபல திரைப்பட இயக்குநர். இருவருமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துணை நடிகர் மரணம்!


2024ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் ஒருவராக மாறிவிட்டார், சினிமா துணை நடிகர் கோதண்டராமன். சுந்தர் சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஒன்றாகவே பயணிக்கும் கேரக்டராக இருந்தார். இவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கலகலப்பு படத்தில் பிறரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவருக்கு 65 வயது. இவர், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறார். பெரம்பூரில் இருக்கும் இவரது இல்லத்தில், இவரது உயிர் பிரிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


இவரது மரணம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருக்கு சில நடிகர்களும், நண்பர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இயக்குநர் மரணம்!


தமிழ் திரையுலகிற்கு இன்னொரு இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. கார்த்தி நடிப்பில் 2012ஆம் ஆண்டில் வெளியான ‘சகுனி’ படத்தை இயக்கியவர் என்.சங்கர் தயாள். இந்த படம், பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இவர் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு படத்தையும் இயக்கி வந்தார். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம், அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. 2 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது. 


சென்னையில் உள்ள கே.கே நகர் பகுதியில் வசித்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு 54 வயதாகும் நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை கொளத்தூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இப்படி, ஒரே நாளில் அடுத்தடுத்து 2 உயிரிழப்புகள் தமிழ் திரையுலகில் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…


மேலும் படிக்க | கங்குவா படத்தின் எடிட்டர் 43 வயதில் மரணம்!! காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ