பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…

Pradeep K Vijayan Death : தமிழ் திரையுலகில் பிரபல துணை நடிகராக விளங்கும் பிரதீப் கே.விஜயனின் உடல், உயிரிழந்து 2 நாட்களுக்கு பிறகு சடலமாக அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2024, 02:35 PM IST
  • துணை நடிகராக இருந்தவர் பிரதீப் கே.விஜயன்
  • வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
  • உயிரிழப்பிற்கான காரணம் என்ன?
பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு… title=

Pradeep K Vijayan Death : கோலிவுட்டில், எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. அந்த வகையில், திரை துணை நடிகர் பிரதீப் கே.விஜயனின் மரணமும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

யார் இந்த பிரதீப் கே.விஜயன்?

கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த படங்களில், கவனிக்கத்தக்க படங்களில் நடித்து பிரபலமானவர், பிரதீப் கே.விஜயன். தனது முக பாவத்தாலும், டைலாக் உச்சரிப்பாலும்ரசிகர்களை சிரிக்க வைத்த இவர், தெகிடி படம் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவர் நடித்திருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, மீசைய முறுக்கு, மேயாத மான் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. 

மேலும் படிக்க | Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா?

வீட்டில் சடலமாக மீட்பு:

பிரதீப்பை அவரது நண்பர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கின்றனர். ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, இவரை தேடி வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோதும் இவர் கதவை திறக்கவில்லை. கதவு உள்பக்கம் பூட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவது போல இருந்ததால் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். 

சம்பவம் அறிந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது பிரதீப் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் யூகித்தனர். இதையடுத்து, இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர். இவரது உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மகாராஜா படத்தில்...

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம், மகாராஜா. இந்த படத்தில் பிரதீப்பும் ஒருகதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். இப்படம், இன்று (ஜூ 13) வெளியாகியிருக்கிறது. இந்த நேரத்தில் இதில் நடித்திருக்கும் பிரதீப் உயிரிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | அதிர்ச்சி! துணிவு பட நடிகர் திடீர் மரணம்..ஷாக்கில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News