Suriya Private Jet : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், சூர்யா. சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடி பெயர்ந்து விட்டார். இதையடுத்து, இவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றிவந்த வண்ணம் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீடியா வெளிச்சத்தில் சூர்யா:


கோலிவுட் திரையுலகில் இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களிலாவது நடித்து வருகின்றனர். ஆனால், நடிகர் சூர்யாவோ கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹீரோவாக அன்றி, கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்த படங்கள்தான் வெளியாகின. இருப்பினும், அந்த கேரக்டர்கள் ஹிட் அடித்ததால் அவர் தொடர்ந்து மீடியாவின் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார். 


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினையும் பெற்றது. அதே போல, கார்த்திக் சுப்புராஜ் உடன் இவர் இணைந்து பணிபுரியும் ‘சூர்யா 44’ பணிகளுக்கான வேலைகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. இத்துடன் சேர்த்து, இவர் குறித்து அனைவரும் பேசிக்கொண்டே இருக்கும் வகையிலான தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. 


120 ஜெட்டை வாங்கினாரா?


இந்திய திரை பிரபலங்கள் பலர், தங்களுக்கென்று சொந்தமாக ஜெட் விமானங்களை வைத்திருக்கின்றனர். அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், பிரியங்கா சோப்ரா, நாகார்ஜுனா, நயன்தாரா என பலர் ப்ரைவேட் விமானங்களை வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது சூர்யாவும் ஒரு தனியார் விமானத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த விமானத்தின் தொகை மொத்தம் 120 கோடி என்றும் கூறப்பட்டது. 


மேலும் படிக்க | Suriya 44 : சூர்யாவிற்கு வில்லனாகும் இளம் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..


விமர்சனங்களும்..உண்மையும்..


நடிகர் சூர்யா, அகரம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல ஆயிரம் மாணவ-மாணவிகள் கல்வி பயின்றிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி, கல்விக்காக தொண்டு செய்யும் சூர்யா, இவ்வளவு பணம் கொடுத்து பிரைவேட் விமானத்தை வாங்கலாமா என சிலர் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக, அவர்கள் பாஜக கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தற்போது, சூர்யா பிரைவேட் விமானம் வாங்கியது குறித்த தகவல் வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டு வருகிறது. சினிமா வட்டாரங்களில் இருக்கும் நம்பகமான நபர்கள் பலரே, இது பொய்யான தகவல் என்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


சூர்யா மீது, ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு தனிப்பட்ட ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. குறிப்பாக, நடிகை ஜோதிகா சில நாட்களுக்கு முன்பு “தெருவுக்கு தெரு கோயில்கள் கட்டுவதற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டுங்க..” என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதிலிருந்தே, சூர்யாவின் குடும்பம் மீது தனிப்பட்ட முறையில் சிலர் தாக்குதல் செய்கின்றனர். இப்போது தனியார் விமானம் குறித்து பரவிய தகவலும் கூட, அப்படிப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. 


வேட்டையன் vs கங்குவா:


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்னரே ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி முன்னரே வெளியிடப்பட்டு விட்டது. இதையடுத்து, ஒரே தேதியில் இரு படங்களும் மோதுகின்றன. 


மேலும் படிக்க | சூர்யாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? பெரிய கோடீஸ்வரர் தான் பா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ