Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..
Atlee : தமிழ் இயக்குநர் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தினை இயக்க இருந்தார். ஆனால், அப்படம் தற்போது டிராப்பாகி விட்டதாக கூறப்படுகிறது.
Latest News Atlee Kumar Allu Arjun Movie Dropped : தமிழ் இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் பிரபலமான மற்றும் வெற்றிகரமான இயக்குனர்களுள் ஒருவராக இருக்கிறார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர், ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 10 வருடங்களுக்கு முன் வளர்ந்து வரும் இயக்குனர்களின் லிஸ்டில் இருந்த இவர் இப்போது இந்தியாவின் அதிகம் தேடப்படும் இயக்குனராக இருக்கிறார்.
அசுர வளர்ச்சி கண்ட அட்லீ:
தமிழில் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கிய அடுத்து குறி வைத்தது நடிகர் விஜய்க்கு தான். தமிழில் வெகு சில படங்களை இயக்கியிருந்தாலும் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் இவர். நடிகர் விஜய் வைத்து மட்டும், மெர்சல், தெறி, பிகில் என மூன்று படங்களை இயக்கி விட்டார். ஆச்சரியம் என்னவென்றால் இவர் இயக்கிய அந்த மூன்று படங்களுமே விஜய்க்கு பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றுக் கொடுத்தது. தமிழ் திரையுலகு பொருத்தவரை இவரது வளர்ச்சி அசுர வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டிற்க்கு பறந்தார்…
மூன்று வருடங்களாக பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய படம், ஜவான். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அட்லீ, இதில் நாயகியாக நயன்தாராவை இறக்கினார். தமிழ் ரசிகர்களிடையே அட்லீ மீது இருக்கும் பெரிய குற்றச்சாட்டு, அவர் பிற படங்களின் கதையை காப்பியடிக்கிறார் என்பதுதான். ஜவான் படத்தில் இவர் அதையே செய்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் பாலிவுட்டிலோ இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. உலக அளவில் சுமார் ஆயிரம் கோடியை இப்படம் கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பல ஆண்டுகளாக ஹிட் கொடுக்காமல் இருந்த ஷாருக்கானுக்கும் பாலிவுட் மார்க்கெட்டில் ஏற்றும் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருக்கும் அட்லீ! ஸ்க்ரிப்ட் ரெடி..அண்ணன் ரெடியா?
அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணி:
ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியதை தொடர்ந்து, அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க நினைத்தார் அட்லீ. இந்த படத்திற்கான விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இப்படம் தற்போது டிராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காரணம் என்ன?
இயக்குனர் அட்லீ, ஜவான் படத்தை இயக்கிய போது ரூ.80 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதை எடுத்து தான் இயக்கியிருக்கும் படங்களில் அதிக சம்பளம் வாங்குவது என முடிவு செய்த அவர், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆரம்பத்தில் அசைந்து கொடுக்காத தயாரிப்பு நிறுவனம் பின்பு கொஞ்சம் இறங்கி வந்து சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் 100 கோடி கொடுக்க முடியாது என்று அட்லீயிடம் கூறியதாக பேசப்படுகிறது. விடாப்படியாக 100 கோடியிலேயே அட்லீ சம்பளமாக கேட்டதால் படம் டிராப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த கதைக்கு வேறு ஒரு ஹீரோவை அட்லீ தேடி வருவதாக திரை வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகி ‘இவர்’தான்! அட நம்ம ஊர் அழகி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ