Latest News Indian 2 Movie : தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநராக விளங்குபவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பினையும், விமர்சனத்தையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இவரது இந்தியன் 2 திரைப்படம், விரைவில் வெளியாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் 2 திரைப்படம்:


இந்திய அளவில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது, இந்தியன் 2 திரைப்படம். 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படம், வரும் 12ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது. முதல் படத்தில் இடம் பெற்றிருந்த சேனாபதி கதாப்பாத்திரம்தான் இந்த படத்திலும் ஹீரோ. இதில் அவருக்கு சுமார் 102 வயதிருக்கும் என கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்காக பிரத்யேகமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 


ரஹ்மானை விட்டுவிட்டு அனிருத்தை தேர்ந்தெடுத்த ஷங்கர்..!


இயக்குநர் ஷங்கர் எடுத்திருந்த முதல் படம், ஜென்டில்மேன். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு மட்டுமல்ல அவர் இயக்கத்தில்  அதன் பின்பு வெளியான காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மான்தான். இவர்களின் கூட்டணியில் வெளியான படங்களும் சரி, அப்படத்தின் பாடல்களும் சரி, சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன. 


இந்தியன் 2 திரைப்படம், ஷங்கரின் கனவு திரைப்படங்களுள் ஒன்றாகும். இதற்கும் அவர் தனக்கு மிகவும் ஃபேவரட்டான ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக அனிருத்திடம் படத்திற்கு இசையமைக்கும் பணியை ஒப்படைத்தார் ஷங்கர். பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளியாகின. இந்த நிலையில், ஷங்கர் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். 


ஷங்கர் பதில்!


இந்தியன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் ஷங்கரிடம் “ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுவிட்டு அனிருத்தை இந்தியன் 2 படத்திற்காக தேர்ந்தெடுத்தது ஏன்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருந்த அவர், இந்தியன் 2 படத்தின் பணிகளை தொடங்கிய போது ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே 2.0 பட வேலைகளில் பிசியாக இருந்ததாகவும் அதனால் அவரை தொல்லை செய்ய வேண்டாம் என நினைத்து அனிருத்தை தேர்ந்தெடுத்ததாகவும் பேசியிருக்கிறார். மேலும், அனிருத்தின் இசை தனக்கு பிடித்திருந்ததும் அவரை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் என்று பேசியிருக்கிறார்.


மேலும் படிக்க | Indian 2 Memes : இந்தியன் 2 டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..


கமல்ஹாசன் கூறியது..


கமல்ஹாசனிடமும் அனிருத்தை இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் அதற்கு பதில் இளையராஜாவாகத்தான் இருக்கும் என்று கூறினார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மானாே, அனிருத்தோ யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இயக்குநரின் விருப்பம் என்று கூறியிருந்தார் கமல். 


எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்குமா இந்தியன் 2?


இந்தியன் 2 திரைப்படம் முதல் பாகத்தின் ரிலீஸிற்கு பிறகு 28 வருடங்கள் கழித்து வெளியாவதால் இதன் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் வெளியான படத்தின் டிரைலர் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் ஷங்கர் மீதும் கமல்ஹாசன் மீதும் இருக்கும் நம்பிக்கையுடன் ரசிகர்கள் பட வெளியீட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ