கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்து! முக்கிய நடிகர் காயம்!

George Stuck Accident: கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் லேசான காயத்துடன் தப்பியுள்ளார்.

 

1 /6

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் உலக  நாயகன் கமல் ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  

2 /6

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  

3 /6

பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தற்போது 50% சதவீதத்திற்கு மேல் முடிவடைந்துள்ளது.   

4 /6

இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.  

5 /6

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் முக்கியமான காட்சி எடுத்து கொண்டிருக்கும் போது இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்க முடியாமல் கட்டுபோட்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.   

6 /6

ஜோஜு ஜார்ஜ் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். மேலும் நிறைய மலையாள படத்திலும் இவர் நடித்துள்ளார்.